2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 18)
"தேவன் நம்மை வாழ்க்கையில் வெற்றியாளர்களாக ஆக்குவார்" என்று ஒருபோதும் எங்களுக்கு கூறப்பட்டிருக்கவில்லை.
எங்களுக்கு கூறியதெல்லாம் "வாழ்க்கையில் நடக்க வேண்டியது என்று இருப்பின் அதுவே நடக்கும்" என்றே கூறக் கேட்டருக்கிறோம்.
"தேவனுடைய வீட்டில் நம்பிக்கை இருக்கிறது என்றோ, உங்கள் வார்த்தைகளால் காரியங்களை மாற்ற முடியும்" என்று யாரும் எங்களிடம் கூறவில்லை.
“விசுவாசம் என்பதான ஒரு மகா சக்தி இருக்கிறது என்று யாரும் சொல்லவில்லையே!” என்று திரும்பிக் கூறுவார்கள்.
எல்லா நன்மைகளுக்கும் பலனளிக்கிற ஒரு ஜீவனுள்ள தேவனைப் பற்றி நாங்கள் ஒருபோதும் கற்றுக்கொள்ளவில்லை.
அவர் ஒரு ஜீவனுள்ள தேவன், அவர் நாங்கள் அனைத்தையும் அனுபவிப்பதற்காக எல்லாவற்றையும் நிறைவாகக் கொடுக்கிறார். (1 தீமோத்தேயு 6:17)
நாங்கள் எங்கள் ராஜா மீது நம்பிக்கை வைத்துள்ளோம். நாங்கள் எங்கள் தேவனை விசுவாசிக்கிறோம்.
மறுசீரமைப்பிற்காக நாங்கள் தேவனை விசுவாசிக்கிறோம்.
பாரிய மனந்திரும்புதல் மற்றும் வெகுஜன மறுசீரமைப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இது ஏற்கனவே ஆரம்பித்து விட்டது.
கிறிஸ்துவிடம் வரமாட்டார்கள் என்று நாம் உண்மையில் நினைத்தவர்கள் கிறிஸ்துவிடம் வரப் போகிறார்கள்.
உலகம் வீழ்ச்சியடைந்துக் கொண்டு வருவதையும், அவர்கள் திரும்புவதற்கு வேறு இடமில்லாததையும் அவர்கள் காணும்போது, அவர்களை நோக்கி நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கரங்கள் எப்போதும் நீட்டப்பட்டிருக்கும்.
அவர்கள் நம்பிக்கொண்டிருந்த விஷயங்கள் ஆட்டங்கண்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவர்கள் காணும்போது, அவர்கள் இயேசு எனும் பர்வதத்தினண்டைக்கு வரப் போகிறார்கள்.
அவர்கள், "நாம் கன்மலைக்குத் திரும்புவோம், நம்முடைய இரட்சிப்பின் பாறையாகிய இயேசுவிடம் வருவோமாக, நாங்கள் இயேசுவை விசுவாசிக்கிறோம்" என்று கூறப் போகிறார்கள்.
விசுவாசிகளின் ஐக்கியம்
_____________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#867)]