2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 17)
பாரிய மனந்திரும்புதலும் பாரிய மறுசீரமைப்பும் மற்றும் மெய்யான குணப்படுத்துதல்களும் நடைபெறப் போகின்றன.
மக்கள் தேவனின் வல்லமையை அனுபவிக்கப் போவதோடு, அவர்கள் அதிசயத்திற்கு மேல் அதிசயங்களைக் காணப் போகிறார்கள்.
அவர்கள் வாழ்க்கையில் பெரிய காரியங்கள் நடைப் பெறப்போகின்றன.
ஒருகாலத்தில் தேவனுடைய ஜனங்களாக இல்லாதிருந்தவர்கள் அவருடைய ஜனங்களாவார்கள். (1 பேதுரு 2:10)
எதற்கும் லாயக்கற்றவர்கள் உன்னத தேவனின் மக்களாக இருக்கப் போகிறார்கள். (ரோமர் 9.26)
ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவிடம் வந்த பிறகு, அவர்கள் தங்கள் வாழ்க்கையில் தேவனுடைய கிருபையை காணுகையில், "இதுபோன்றதான செழிப்பை நாங்கள் ஒருபோதும் அனுபவித்ததில்லை" என்று கூறுவார்கள்.
ஆகவே பாரிய மனந்திரும்புதல் ஏற்படப் போவதன் நிமித்தம் அநேக மறுசீரமைப்புகளை ஏற்படப் போகின்றன.
அந்த காரணத்தால் நீங்கள் கர்த்தரின் கிருபையினுாடாக நடக்க வேண்டும் என்பதை அவர் விரும்புகிறார்.
நீங்கள் தாழ்மையுள்ளவர்களாக இருப்பதையே அவர் எதிர்பார்க்கிறார். கர்த்தர் உஙகளைப் பயன்படுத்த வேண்டும் என நீங்கள் விரும்பினால், நீங்கள் தாழ்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
கற்றுக் கொள்ளக் கூடிய மனப்பான்மையைக் கொண்டிருங்கள். அப்பொழுது உங்கள் ஒவ்வொருவரையும் இந்த உலகிற்கு மறுசீரமைப்பைக் கொண்டுவரும்படியாக எடுத்துப் பயன்படுத்துவார்.
மனந்திரும்புதல் இல்லாமல், மறுசீரமைப்பு இல்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவைகளிளல் இருந்து மனந்திரும்பி, இயேசுவிடம் ஓடி வரப் போகிறார்கள்.
"இந்த மாதிரியான அன்பை நாங்கள் ஒருபோதும் அனுபவித்ததே இல்லை" என்று மக்கள் கூறப் போகிறார்கள்.
"எங்கள் வாழ்க்கையில் இதுபோன்ற அற்புதங்களை நாங்கள் பார்த்ததில்லை."
"தேவனே அன்பு என எங்களுக்கு கூறப்படவில்லை" என்று கூறப்போகிறார்கள்.
விசுவாசிகளின் ஐக்கியம்
_____________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#866)]