+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

முற்றிலும் ஜெயங்கொள்ளவே கர்த்தர் நம்மை அழைத்திருக்கிறார்!

1_E.png

தேவனின் பிள்ளைகள் என்ற வகையில் நீங்கள் வெற்றியுடன் வாழவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

தேவனிடமிருந்து பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஜெயங் கொள்ளுகிறவர்களாக இருப்பதுடன் அவர்கள் உலகத்தை ஜெயிப்பவர்கள்  என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். 1 யோவான் 5:4

இதோ, நீங்கள் ஒரு புதிய பிறப்பைப் பெற்றுள்ளீர்கள், மனிதனின் அழியாத விதையிலிருந்து அல்ல, மாறாக ஜீவிக்கிறவரும் மாறாதவருமாகிய தேவனின் அழியாத மற்றும் நித்திய விதையாகிய திரு வசனத்தின் மூலம், நீங்கள் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை வாழப் பெற்றுள்ளீர்கள்.  1 பேதுரு 1:23

உங்கள் புதிய வாழ்க்கையை உங்கள் பழைய பாவ வாழ்க்கையுடன் ஒப்பிட முடியாது.

உங்கள் இயற்கையான பிறப்பு மரணத்தின் விதையிலிருந்து வந்தது, ஆனால் உங்கள் புதிய பிறப்பு தேவனின் ஜீவனுள்ள வார்த்தையிலிருந்து வந்தது.

இதைக் கவனியுங்கள்: உங்கள் புதிய வாழ்க்கையானது தேவனாலேயே கர்ப்பந்தரிக்கப்பட்டது!

இப்போது நீங்கள் நித்திய மற்றும் ஜீவக்கிற  வார்த்தையின் மூலம் தேவனுக்கு ஏற்ற வகையிலான புதிய வாழ்க்கையைப் பெற்றுள்ளீர்கள், மேலும் தேவன் உங்களுக்குள் விதைத்த இந்த "விதை" ஒருபோதும் அழிக்கப்பட முடியாது, அது உங்களுக்குள் என்றென்றும் வாழ்ந்து வளருகிறதாக இருக்கிறது. 1 கொரிந்தியர் 15:57

நமது விசுவாசமே உலகை வெற்றி கொள்ள அனுமதிக்கிற விடயமாக இருக்குறது. 2 கொரிந்தியர் 2:14

வெற்றி என்பது வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் எந்தச் சூழலையும் மேற்கொள்ளக்கூடிய வலிமையாகும்.

நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தாமே எதிரியை தோற்கடித்து, மரணத்தையும் நரகத்தையும் வென்றார்.

இப்போது கர்த்தர் உன்னிடமும் என்னிடமும் கூறுகிறார், "நான் ஜீவனுள்ளவர்! நான் மரித்தேன், ஆனால் இப்போது பார் - நான் என்றென்றும் உயிருடன் இருக்கிறேன். மரணத்தையும் (கல்லறை) மற்றும் நரகத்தையும் (கண்ணுக்கு தெரியாத உலகம்) திறக்கும் திறவுகோலை உடையவராக இருக்கிறேன்." வெளிப்படுத்துதல் 1:18

இப்போது நமக்கு வெற்றிவாகை சூடக் கொடுத்ததற்காகவும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் முற்றிலும் ஜெயங்கொள்ள உதவியதற்காகவும் தேவனுக்கு நன்றி கூறுவோமாக! ரோமர் 8:37

தேவனுடைய முடிவில்லாத வெற்றியில் நம்மையும் பங்குதாரர்களாக சேர்த்துக்கொள்ளும் பொருட்டு, கிறிஸ்துவிற்குள் எப்பொழுதும் அவருடைய கிருபையை காணும்படி செய்கிறார்,

நமது அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வின் மூலம், நாம் செல்லும் இடமெல்லாம் கர்த்தரைப் பற்றிய அறிவின் நறுமணத்தை அவர் பரப்புகிறவராக இருக்கிறார்!

எனவே நினைவில் கொள்ளுங்கள், கர்த்தர் உங்களை நேசிக்கிறார், உங்கள் எல்லா கஷ்டங்களிலும் அவர் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரக் கூடியவராக இருக்கிறார்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#11)]

Read 702 times