+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

நிதி நிலைக்கு நல்ல உக்கிராணக்காரர்களாக இருங்கள்! (பகுதி 2)

1_E.png

தேவனுடைய வார்த்தையைக் கற்கும்போது, ​​நம்முடைய பணப் பிரச்சினைகளுக்காக சிற்சில காரணங்கள் இருப்பதை நாம் காணலாம்.

நாம் தேவனுடைய தராதரங்களுக்கு எதிராக நம்முடைய பணத்தை நிர்வகிக்கிறவர்களாக இருக்கலாம்.

அப்படியானால், நாம் அதைக் குறித்து மனந்திரும்ப வேண்டும்.

மனந்திரும்புவதற்கு மனம் அல்லது இருதயத்தில் மாற்றம் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நாம் சிந்திக்கும் விதத்தை மாற்றிக் கொள்ளாவிட்டால், கடந்த காலத்தில் இருந்ததைப் போலவே எதிர்காலத்திலும் அதிக நிதிச் சிக்கல்களைச் சந்திக்க நேரிடலாம்.

எனவே தேவன் உங்களுக்குக் கொடுத்தவற்றைக் குறித்து நல்ல உக்கிராணத்துவகாரர்களாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.

மேலும், உண்மையுள்ளவர்களாக இருங்கள். உண்மையுள்ளவர்களாக இருப்பதன் மூலம், தேவனிடமிருந்து பல பலன்களைப் பெறுகிவர்களாக இருக்கிறோம். லூக்கா 16:1-15

நம்மிடம் உள்ள அனைத்தும் கர்த்தரிடமிருந்து வந்தவை என்பதை நாம் உணர வேண்டும்.

என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய உங்களுக்கு ஞானம் தேவைப்பட்டால், அதை தேவனிடம் கேளுங்கள், அவர் அதை உங்களுக்கு கொடுப்பார். யாக்கோபு 1:5

உண்மையுள்ள நபருக்கு ஏராளமான ஆசீர்வாதங்கள் இருக்கும்; ஆனால் ஐசுவரியத்தைப் பெற விரைபவன் தண்டிக்கப்படாமலிக்க  மாட்டான். நீதிமொழிகள் 28:20

ஒரு வேலைக்காரன் தன் எஜமானின் வீட்டை நிர்வகிக்கபெறும் தகுதி என்ன?

அவன் ஒரு ஞானமுள்ள உண்மையுள்ள மற்றும் நம்பக்கூடியவராக இருப்பதாகும்.

ஏனென்றால் அவன் மற்றவர்களை நன்றாக வழிநடத்தி,  சரியான நேரத்தில் அவர்களுக்கு உணவு கொடுத்து வந்த காரணத்தால்,  எஜமானர் அவனை மற்றவர்களை மேற்பார்வையிடுவதற்காக நியமிப்பார்.

எஜமானர் வீட்டிற்கு வரும்போது, ​​அந்த உண்மையுள்ள வேலைக்காரன் சிறப்பாகச் சேவை செய்வதைக் காணும்போது அந்த வேலைக்காரனுக்கு மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் வரும்!

எஜமானர் அவனை எழுப்பி, அவருக்கு சொந்தமான அனைத்தையும் பொறுப்பேற்கச் செய்வார் என்பதைக் குறித்து நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.

வாசிப்பு: மத்தேயு 24:45-47; மத்தேயு 25:14-30

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#15)]

Read 736 times