+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

நீங்கள் பயத்தில் வாழ வேண்டியதில்லை! (பகுதி 2)

1_E.png

பிசாசு சகல சந்தர்ப்பத்திலும் பயத்தின் மூலக்காரனாவான்.

நீங்கள் பயப்படும்போதெல்லாம், பிசாசுக்கு இடம் கொடுக்கிறீர்கள்.

 “பிசாசுக்கு இடம் கொடுக்காதீர்கள்.” என வேதாகமம் கட்டளையிடுகிறது,

மனுஷனுக்குப் பயப்பட வேண்டாம்.

நீதிமொழிகள் 29:25 நமக்குச் சொல்கிறது, “மனுஷனுக்குப் பயப்படுகிற பயம் கண்ணியை வருவிக்கிறது; ஆனால் கர்த்தர் மீது நம்பிக்கை வைப்பவன் பாதுகாப்பாக இருப்பான்” என.

‘கண்ணி’ என்ற சொல்லுக்கு பொறி அல்லது சிக்குதல் என்று பொருள்.

மனிதனுக்குப் பயப்படுகிறதின் நிமித்தம் பிசாசு நம்மைத் தன் வலையில் சிக்க வைக்க வகைத் தேடுகிறான்.

நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனுடைய அன்பு நம் இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறது.

எனவே, “அன்பில் பயம் இல்லை; பரிபூரண அன்பு பயத்தை விரட்டுகிறது: ஏனெனில் பயத்தில் வேதனை உண்டு. பயப்படுகிறவன் அன்பில் பூரணப்படுத்தப்பட்டவன் அல்ல.

உங்களுக்குள் இருக்கும் பரிபூரண அன்பு பயத்தை விரட்டுகிறது!

நீங்கள் தியானம் செய்வதற்கும், பயத்தின் ஆவியிலிருந்து விடுபடுவதற்கும் சில வேத வசனங்களைத் தர விரும்புகிறேன்.

இந்த வாக்குத்தத்தங்களை நீங்கள் அறிக்கையிடத் தொடங்கும் போது, ​​உங்கள் உள் மனிதனில் ஒரு வலிமையான விடுதலை மற்றும் சுதந்திரத்திற்கு தயாராகுங்கள்!

கூறுவோமாக:

மனிதனின் முகத்தைக் கண்டு நான் பயப்பட மாட்டேன். உபாகமம் 1:17.

நான் கர்த்தர் மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன்: ஆதலால் நான் பயப்பட மாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான்? சங்கீதம் 56:11

கர்த்தர் என் பட்சத்தில் இருக்கிறார்; நான் பயப்பட மாட்டேன்: மனிதன் எனக்கு என்ன செய்வான்?சங்கீதம் 118:6

கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமாயிருக்கிறார்; நான் யாருக்கு பயப்படுவேன்? தேவனே என் ஜீவியத்தின் வலிமை​; நான் யாருக்கு பயப்படுவேன்? சங்கீதம் 27:1

ஏனென்றால், “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை” என்று கர்த்தர் சொல்லியிருக்கிறார். எனவே நான் தைரியமாகச் சொல்வேன், “கர்த்தரே எனக்கு சகாயம் செய்பவர், நான் பயப்படேன், மனிதன் எனக்கு என்ன செய்வான்?” எபிரெயர் 13:6.

வாசியுங்கள்: 2 தீமோத்தேயு 1:7; 1 யோவான் 4:18; யாக்கோபு 4:7; பிலிப்பியர் 1:28; எபேசியர் 4:27

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#20)]

Read 202 times