+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South
தேவனுடைய சமூகத்திற்குத் துதியுடன் பிரவேசியுங்கள்!
சங்கீதம் 100:4 கூறுகிறது, "அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்."
வாசல் என்ற எபிரேய வார்த்தைக்கு நுழைவாயில் என்று பொருள்படும்.
தேவனுடைய சந்நிதியை சேருவதற்கான நுழைவாயில் இயேசுவானவராகும்.
யோவான் 10:7,9
நன்றியோடு கூட அவருடைய சமூகத்திற்கு எம்மால் வரக் கூடியதாக இருக்கின்றது.
“ஆகையால், அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாய் எப்போதும் தேவனுக்குச் செலுத்தக்கடவோம்.” எபிரெயர் 13:15
உங்களுடைய ஸ்தோத்திரப் பலிகளை அவருடைய முன்னிலையில் கொண்டு வந்து அவருடைய அழகிய நாமத்தை ஆசீர்வதிக்கவும்!
அவருடைய பிரசன்னத்திற்குள் பிரவேசித்து, அவருக்கு நன்றி செலுத்தி, துதித்து, ஆசீர்வதித்து, இப்படியாகவே நாம் ஜெபத்தைத் ஆரம்பிக்க வேண்டும்.
ஜெபத்தின் வாயிலாக நாம் தேவனுடைய பிரசன்னத்திற்குள் நுழைவது எவ்வாறு என்பது பற்றி இயேசு நமக்குக் கற்றுக் கொடுத்தார்.
அவர் மத்தேயு 6:9 இல் கூறினார்: "பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உமது நாமம் பரிசுத்தப்படுவதாக."
நம்முடைய பிதாவாகிய ஜீவனுள்ள தேவனுடனான நமது உறவை அங்கீகரிப்பதன் மூலம் நமது ஜெபத்தைத் ஆரம்பிப்போம்.
கர்த்தர் நல்லவராக இருப்பதால் நாம் அவரைப் போற்றுகிறோம்.
அவர் அழகானவராக இருப்பதால் அவருடைய அலங்காரமான நாமத்திற்கு அன்பான துதி பாடுகிறோம். சங்கீதம் 135:3
துதி கவனச்சிதறலை விரட்டுவதோடு கர்த்தருடைய பிரசன்னத்தை நம் மத்தியில் கொண்டு வருகிறது.
துதி என்பது கர்த்தருடைய செவிகளுக்கு ஒரு இனிமையான ராகமாகும், ஆதலால் நாம் அவருக்கு துதி மற்றும் நன்றி பாடல்களைப் பாடுவது ஏற்றதாயிருக்கிறது.
‘அவரை ஒரு ‘தேவனாக, நீதிபதியாக அல்லது ஒரு சிருஷடிகர்த்தாவாக’ எண்ணி அணுகாதீர்கள். இது ஒரு நபருடன் தொடர்பில்லாத தன்மையையும் மற்றும் தொலைதூர நட்பையும் ஏற்படுத்துவதாக இருக்கிறது.
பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களையும் விட, புதிய ஏற்பாட்டில் மீண்டும் பிறந்த தேவனுடைய ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் தேவனோடு கூட மிக நெருக்கமான, தனிப்பட்ட உறவை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.
அது எவ்வளவு நன்மையானதாக இருக்கின்றது? அவருடைய நற்குணத்தையும் அனுக்கிரகத்தையும் நீங்களே நினைவூட்டிக் கொடுங்கள். மேலும், அவர் உங்களோடு கோபமாக இல்லையென்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் பாவம் செய்தாலும், அவர் உங்களை நச்சரித்துக் கொண்டிருப்பதில்லை.
தேவன் உங்களைக் குறித்து மகிழ்வேதோடு, உங்களை அதிகமாக நேசிக்கிறவராகவும் இருக்கிறார்.
நீங்கள் அவருடைய சந்நிதியில் சேரும்போது, அவர் உங்களுடைய பிதாவாகிறார் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்!
உங்கள் சொந்த குறைபாடுகளில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவருடைய நன்மைக்காக அவருக்கு நன்றி கூறுங்கள்!
"நன்றியறிலுள்ளவர்களாக’ இருக்கும்படிக்கு புதிய ஏற்பாடு நமக்குக் கட்டளையிடுகிறது." கொலோசெயர் 3:15
அல்லேலூயா! கர்த்தருக்கு ஸதோத்திரம்!
விசுவாசிகளின் ஐக்கியம்
_____________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#1)]