+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South
நீங்கள் சத்தியத்தை அறிவீர்களாயின், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மாற்கு 8:36
ஒருவரும் கெட்டழிந்து போவது தேவனுடைய சித்தம் அல்ல, அனைவரும் மனந்திரும்ப வேண்டும் என்பதே அவருடைய சித்தமாக இருக்கிறது. 2 பேதுரு 3:9
இயேசுவே வழியும், சத்தியமும் மற்றும் ஜீவனுமாக இருக்கிறார்! யோவான் 14:6
தண்ணீர் தானாகவே ஒருவரைச் சுத்திகரிக்காதது போல் சத்தியம் மக்களை தானாக விடுதலையாக்குவதில்லை. ஆனால் சத்தியத்தைப் பயன்படுத்தினால் நிச்சயம் விடுதலைக் கிடைக்கும்.
இன்று கிறிஸ்தவர்கள் கண்டனத்திலும் குற்றச்சாட்டிலும் வாழ்கின்றனர்.
சிலர் நோய் மற்றும் வறுமையின் சாபத்தால் சோர்வடைந்து வாழ்கின்றனர்.
சிலர், "கிறிஸ்துவுக்காக வாழ்வது மிகவும் கடினம்" என்று நினைத்து, தங்கள் விசுவாசத்தை கைவிட்டு, உதாசீனமுள்ளவர்களாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் காரணிகளால், இன்று கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவிற்குள் தங்கள் முழுத் திறனோடு வாழத் தவறிவிட்டனர்.
இது தேவனிடமிருந்து வரும் சிறந்த விஷயம் அல்ல.
அது ஏன் அவ்வாறு நடைபெறுகிறது?
இது ஒரு பழமையான உண்மையைச் சுற்றி வருகிறது என்று சொல்லலாம்.
இன்று கிறிஸ்தவர்களுக்கு புதிய உடன்படிக்கையின் மீதான விசுவாசத்தைக் குறித்த போதிய புரிதல் இல்லை என்பது தெளிவாகிறது.
இயேசு தம்முடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றின் மூலம் உங்களுக்காக என்ன செய்தார் என்பதை நீங்கள் நன்கு புரிந்துகொண்டிருந்தால் அல்லது அதைச் சரியாகப் புரிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால், அந்த அறியப்பட்ட சத்தியமானது உங்களை விடுதலையாக்குவது நிச்சயம்.
"சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்" என்று இயேசு கூறினார்.
ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள். (யோவான் 8:32, 36).
விசுவாசிகளின் ஐக்கியம்
_____________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#2)]