+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

கிறிஸ்து இயேசு உங்களை நேசிக்கிறார்!

1_E.png

கர்த்தர் உங்களை நித்திய அன்பினால் நேசிக்கிறார் என்பதை அவருடைய வார்த்தை கூறுகிறது. மேலும் அவர் தம்முடைய மாறாத அன்பான இரக்கத்தால் உங்களைத் தம்மிடம் ஈர்த்துக்கொண்டார். எரேமியா 31:3

அவர் உங்களை அளவுக்கதிகமாய் நேசிப்பதை முன்னிட்டு, கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தால், பழுதற்ற, கறையற்ற ஒரு பலியாட்டுக்குட்டியின் இரத்தத்தால் அவர் உங்களை விலைக்கு வாங்கினார். ஏனென்றால், நீங்கள் தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையின் அழியாத நித்திய விதையின் மூலமாக, மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள்.

அவர் உங்களுக்குள் விதைத்த இந்த "விதையானது" தொடர்ந்தும் உங்களுக்குள் வாழ்ந்து வளருமேயொழிய அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை.

1 பேதுரு அதிகாரம் 1 வசனங்கள் 18-19 மற்றும் 23ஐப் படியுங்கள்.

நீதிமானாக்கப்படுதல்; அதவாது கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பின் மூலமாகவும் அவருடைய கிருபையைக் கொண்டும் இலவசமாக நீதிமான்களாக்கப்படுதலாகும்.

இப்போது அவர் உங்களை ஒரு பாவியாகப் பார்க்கவில்லை, அத்துடன் நீங்கள் எந்தப் பாவமும் தவறும் செய்யாத ஒருவரைப் போன்றே காண்கிறார்.

அவருடைய கிருபையால் நீங்கள் நீதிமான்களாக்கப்பட்டீர்கள், இலவசமாகவே நீதிமான்களாக்கப்பட்டீர்கள், இயேசு கிறிஸ்து அதை நீங்கள் பெறுவதற்காக மீட்பின் கிரயத்தைச் செலுத்தினார். ரோமர் 3:24

இப்போது நீங்கள் தேவனின் பார்வையில் "நீதியான" ("நீதிமான்") என்று அறிவிக்கப்பட்டுள்ளீர்கள்.

நீங்கள் கிருபையால் மட்டுமே இரட்சிக்கப்பட்டீர்கள். எபேசியர் 2:8

உங்கள் இரட்சிப்புக்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

நீங்கள் கிரயத்தைச் செலுத்தவில்லை, அது உங்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

உங்களுக்காக மீட்பின் விலையைச் செலுத்தியவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து.

அவர் உங்களுக்கு நித்திய ஜீவனை இலவசமாகக் கொடுத்தார்.

"நீ ஒரு தகாத பாவி!" என கூறாதே.

மீட்பு என்பது, "உங்கள் நிமித்தமாக கிரயம் செலுத்தப்பட்டு, பிசாசின் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுதலை செய்யப்படுவதாகும்."

இயேசு தாமே உங்கள் பாவத்தையும் தப்பிதங்களையும் ஏற்றுக்கொண்டு உங்களை மீட்க பெரும் வாரியாக கிரயத்தைச் செலுத்தினார்.

மீட்பிற்கான முழு கிரயத்தையும் அவர் தனது சொந்த விலைமதிப்பற்ற இரத்தத்தாலேயே செலுத்தினார்.

இன்று,  தேவப் பிள்ளை என்ற வகையில்,  அவர் உங்களுக்காக செலுத்திய முழு கிரயத்தின் காரணமாக நீங்கள் அவருக்கு முன்பாக நீதிமான்களாக நிற்கிறீர்கள். அல்லேலூயா!

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#5)]

Read 685 times