+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

தீய எண்ணங்களும் தீய வார்த்தைகளும் தீட்டை ஏற்படுத்துகின்றன! (பகுதி 1)

1_E.png

மத்தேயு 15:11 ல், "ஒரு மனிதனின் இதயம் அவனது வார்த்தைகளால் தீட்டுப்படுத்தப்படுகிறதாக" இயேசு நாதர் மொழிந்தருனார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்களைத் தீட்டுப்படுத்துவது நீங்கள் உண்ணும் உணவு அல்ல,நீங்கள் கூறும் வார்த்தைகளாகும்.

உங்கள் வார்த்தைகள் நல்லதற்கான அல்லது தீமைக்கான சுயரூபங்களை உருவாக்குகின்றன.

தீமை தோன்றுவது இதயத்தில் அல்ல; அது சிந்தனை முறையிலேயே உருவாகிறது.

தீமை என்பது முதலில் இதயத்தில் கருவுறும் வரை தியானிக்கப்பட்டுக் கொண்டும் வாசம் பண்ணிக்கொண்டும் இருக்கும் ஒரு எண்ணமாகும்.

இறுதியாக, நீங்கள் அதனைப் பேசுவதன் மூலம் அந்த எண்ணத்தைப் பிறக்கச் செய்கிறீர்கள்.

பிசாசானவன் உங்கள் மனதில் கெட்ட எண்ணங்களையும் சந்தேகங்களையும் புகுத்துவதைத் தடைச் செய்யக் கூடாதிருந்தாலும் அந்த இடத்தில் தானே உங்களுக்கு அதனை தடுத்து நிறுத்திவிட முடியும்.

நீங்கள் அவற்றை தியானிக்காமலும் பேசாமலும் இருப்பதன் மூலமாக, அவைகள் பிறப்பதற்கும் முன்பதாக அவற்றை மரணிக்கச் செய்ய உங்களால் கூடுமாகும்.  

நீங்கள் பேசும் வார்த்தைகள் உங்களுக்குள் பல்வேறு சுயரூபங்களை பிறப்பிக்கவும் உருவாக்கவும் செய்கின்றன.

இந்த சுயரூபங்களானது சிந்தனைகளின் செயற்பாட்டுடனேயே ஆரம்பிக்கின்றன.

பின்னர் அவற்றைத் தியானிப்பதன் மூலம், அவை இதயத்தில் ஊடுருவுகின்றன.

ஒருமுறை இதயத்திற்கு உட்பிரவேசித்தவுடன் இதயத்தில் நிறைந்திருப்பவை  வாயினால்  வெளியேறுகிறது.

இவ்வண்ணமாக அனைத்தும் இதயத்தில் இருந்து புறப்படுகின்றன.

இந்த உண்மைகளை ஒருபோதும் கற்றுக் கொள்ளாத்தின் விளைவாக பலரும் தேவையற்ற துன்பங்கள் பலருக்கு வருகின்றன.

கர்த்தருடைய வார்த்தையானது, “கற்பனைகளையும்,  தேவனை அறிகிற அறிவிற்கு எதிராக தன்னை உயர்த்திக் கொள்ளும் எல்லா உயர்வான விஷயங்களையும் கீழே தள்ளுங்கள்.

எங்களுக்கு மனதில் உள்ள விவாதங்களை அழித்து விடலாம். அங்கனம் செய்ய முடியாதிருப்பின் அங்கனம் செய்யும்படிக்கு வார்த்தை நமக்குக் கூறுவதில்லை.

இப்போது நீங்கள் இவ்வண்ணமாகவே கற்பனைகளையும் காரணங்களையும் தூக்கி எறிகிறீர்கள்.

உங்கள் சிந்தனையில் தீய சிந்தைகள் வரும்போது, ​​ உங்களுடைய வார்த்தையக் கொண்டு தேவனுடைய வார்த்தையை மேற்கோள் காட்டுவதன் மூலமும் அதனைப் பற்றி சிந்திப்பதன் மூலமாகவும் அத்தகைய சுயரூபங்களை மாற்றக் கூடும்.

உங்கள் காதுகள் கேட்கும்படிக்கு  தேவனுடைய வாக்குத்தத்தங்களை சத்தமாகப் பேசுங்கள்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#16)]

Read 710 times