+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South
தீய எண்ணங்களும் தீய வார்த்தைகளும் தீட்டை ஏற்படுத்துகின்றன! (பகுதி 2)
வார்த்தை இவ்வாறு கூறுகிறது, "தீமையால் தோற்கடிக்கப்படாமல், தீமையை நன்மையால் வெல்லுங்கள்."
நல்ல சிந்தனையைக் கொண்டும், நல்ல குணாதிசயங்களைக் கொண்டும் உங்கள் மனதையும் இதயத்தையும் நிரப்புங்கள்.
அப்படிச் செய்வதால் தீய சுபாவங்கள் மறைந்துவிடும்.
உங்கள் சொந்த வார்த்தைகள் மற்றும் உங்கள் சொந்த எண்ணங்களைக் கொண்டு நீங்கள் விரும்புகிற சுபாவங்களை உருவாக்கலாம்!
தேவன் தாமே இஸ்ரவேலர்களுக்கு முன்பதாக ஆசீர்வாதமும் சாபமுமாகிய இரண்டையும் வைத்தார், ஆனால் அவர் ஆசீர்வாதத்தைத் தேர்ந்தெடுக்கும்படி அவர்களிடம் கூறினார்:
“ஆம், ஆனாலும் அந்த வாக்குத்தத்தங்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு அல்லவா கொடுக்கப்பட்டது” என நீங்கள் கூறலாம்.
இல்லை, இந்த வாக்குத்தத்தங்கள் தேவனுடைய மக்களுக்கே கொடுக்கப்பட்டது.
அதனை நீங்கள் விசுவாசித்து பெற்றுக் கொள்ள ஆயத்தமெனின், இது இன்று உங்களுக்குரிய வாக்குத்தத்தமாகும்.
ஆபிரகாமின் ஆசீர்வாதம் உங்கள்மேல் வரும்படிக்கு கிறிஸ்து உங்களை நியாயப்பிரமாணத்தின் சாபத்திலிருந்து மீட்டுக்கொண்டார்
ஜீவனைத் தேர்ந்தெடுப்பதை இப்போதே ஆரம்பியுங்கள்.
தேவன் தாமே உங்கள் எதிரில் வாழ்வையும் மரணத்தையும், ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் வைத்துள்ளார்; எனவே, வாழ்வைத் தேர்ந்தெடுங்கள்.
தேர்வு செய்ய உங்களுக்கு அதிகாரம் உள்ளது.
உங்களுக்காக வேறு யாரும் தேர்வு செய்ய முடியாது.
நீதிமொழிகள் 18:21 இன் படி, "மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் உள்ளன; அதை விரும்புகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்."
எனவே சிறந்ததைப் பெறுவதற்கு தேவனை விசுவாசியுங்கள்.
முழுமையான வாழ்வுக்காக தேவனை விசுவாசியுங்கள்.
நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் சிறந்ததை நம்புங்கள்!
வாசியுங்கள்: மத்தேயு 15:11, 18-20; 2 கொரிந்தியர் 10:5; உபாகமம் 30:11-15, 19; கலாத்தியர் 3:13-14
விசுவாசிகளின் ஐக்கியம்
_____________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#17)]