+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South
ஜெபத்தின் மூலம் என்னை நோக்கிக் கூப்பிடுங்கள், நான் உங்களுக்கு பதிலளிப்பேன்!
இந்த முழு பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்த தேவன் உங்களிடம் இவ்வாறு கூறுகிறார்: ‘ஜெபத்தின் மூலம் என்னை நோக்கிக் கூப்பிடுங்கள், நான் உங்களுக்கு பதிலளிப்பேன். நீங்கள் இன்னும் அறியாத பெரிய மற்றும் வலிமையான விஷயங்களை நான் உங்களுக்குக் காட்டுவேன். எரேமியா 33:3
உங்கள் மனதில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் தேவையா? உங்களுக்கு தேவையான அனைத்து பதில்களும் என்னிடம் உள்ளன என தேவன் கூறுகிறார். நீங்கள் அவரை அழைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.
உதவி கேளுங்கள், அவரை அழைக்கவும், அவர் உங்கள் ஜெபங்களுக்கு பதிலளிப்பார். எரேமியா 29:12
தேவனுடைய வார்த்தை இவ்வாறு கூறுகிறது, "நீங்கள் கூப்பிடுவதற்கு முன்பே நான் பதிலளிப்பேன், நீங்கள் பேசி முடிக்கும் முன் நான் உங்கள் ஜெபத்தைக் கேட்பேன்.”
எந்த நேரத்திலும் நீங்கள் எங்கிருந்தாலும் ஜெபம் செய்யலாம். மாலையானாலும், காலையானாலும், மதியமானாலும் நீங்கள் குரலை உயர்த்தி ஜெபிக்கலாம். நான் உங்கள் குரலைக் கேட்பேன் என கர்த்தர் கூறுகிறார். கடவுள் உங்கள் குரலைக் கேட்டு பதிலளிப்பார். சங்கீதம் 55:17
ஜெபம் செய்யும் போது தேவனே உங்களது மூல வளம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
ஜெபிக்க முடியாத அளவிற்கு வேலைப் பளுமிக்கவர்கள் ஆக வேண்டாம். ஏனென்றால் ஜெபம் வல்லமையைக் கொண்டிருக்கிறது. சிறந்த பலன்களைப் பெறுவதற்காக உங்களது செயற்பாடுகள் ஒன்றும் தேவைப்படுவதில்லை.
முதலில், உங்களுக்கு ஒரு மகத்தான தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவருடன் ஒரு சிறந்த உரையாடலை நடத்துங்கள். ஜெபத்தின் வல்லமையின் மூலமாக சிறந்த முடிவுகளைக் காணுங்கள்.
ஜெபம் செய்யாதவர்கள் தங்கள் வாழ்க்கையில் பல நன்மையான விளைவுகளைக் காணத் தவறுவார்கள். மெய்யாகவே ஜெபமானது ஒரு கிறிஸ்தவனுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். நாம் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் கிருபையின் சிங்காசனத்தை அணுகுவதற்கு இயேசு வழியைத் திறந்திருக்கிறார். எபிரெயர் 4:16
ஜெபமானது வரம்பற்ற சாத்தியங்களுக்கான கதவைத் திறக்கிறது. பிரார்த்தனை ஒரு மதக் கடமையாகவோ அல்லது கடைசியாக செய்யும் முயற்சியாகவோ இருக்கக்கூடாது.
நீங்கள் கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டதினிமித்தம், கர்த்தருடைய கண்கள் உங்கள் பக்கமாகவும் அவருடைய செவிகள் உங்கள் ஜெபத்திற்குத் திறக்கப்பட்டதாக இருக்கிறது.
வாசிக்கவும்: சங்கீதம் 34:15; 1 பேதுரு 3:12;
நீதிமொழிகள் 15:29.
எனவே, நீங்கள் ஜெபிக்கும்போது எதிர்பார்ப்புடனும், விசுவாசத்துடனும், நம்பிக்கையுடனும் ஜெபிப்பது மிகவும் முக்கியம்.
ஜெபம் என்பது நமக்குத் தேவையானதை பெறுவதற்காக தேவனோடு தர்க்கம் செய்வது அல்லது வாதிடுவது அல்ல, ஆனால் அவருடைய ஆவியானவர் மூலமாக எமக்காக காரியங்களை செய்ய அது நம்மைப் பயிற்றுவிக்கிறது.
ஜெபம் செய்வது அல்லது தேவனிடம் பேசுவது என்பது உங்கள் வெற்றிக்கான அடித்தளமாகும்!
விசுவாசிகளின் ஐக்கியம்
_____________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#18)]