+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 4)

1_E.png

உலகத்தைப் பின்பற்றுவதை விட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுவது நல்லது.

இது சாலச் சிறந்தது, காரணம் உலகம் பிசாசின் அமைப்பு, அது சிதைந்து கொண்டிருக்கிறது, ஆனால் தேவனுடைய ராஜ்யத்தை ஒருபோதும் அசைக்க முடியாது.

அசைக்கக்கூடியவைகள் அசைக்கப்படும்.

நம்மைச் சுற்றி நாம் காணும் அனைத்தும் தள தளத்துக் கொண்டிருக்கின்றன.

தள தளக்கும் காரியங்கள் மீது நமக்கு நம்பிக்கை ஏற்படுவது எப்படி?

நீங்கள் கர்த்தரில் உங்கள் நம்பிக்கையை வைத்து, "நான் நடுங்கும் விஷயங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளப் போவதில்லை" என்று சொல்ல வேண்டும்.

“நான் அசையும் விஷயங்களை விசுவாசிக்கப் போவதில்லை; சகல நல்ல காரியங்களுகவும் நான் தேவனை விசுவாசிக்கிறேன்."

நான் சுகம் பெற்றுக் கொள்ளும்பொருட்டு தேவனை விசுவாசிக்கிறேன்!

நான் செழிப்பைப் பெற்றுக் கொள்ளும்பொருட்டு தேவனை விசுவாசிக்கிறேன்!

எனக்கு சமாதானத்தைப் பெற்றுக் கொள்ளும்பொருட்டு தேவனை விசுவாசிக்கிறேன்!

நன் தைரியமிக்கவானாக வாழும் பொருட்டு தேவனை விசுவாசிக்கிறேன்!

நான் பதவி உயர்வுகளைப் பெற்றுக் கொள்ளும்பொருட்டு தேவனை விசுவாசிக்கிறேன்!

நான் பரிசுத்தமுள்ள ஜீவியம் வாழும் பொருட்டு தேவனை விசுவாசிக்கிறேன்!

தூய்மையான வாழ்க்கை வாழ கடவுள் எனக்கு உதவுவார் என்று நான் நம்புகிறேன்.

அவர் பரிசுத்தமுள்ளவராக இருப்பதுபோல நானும் பரிசுத்தமுள்ளவனாக வாழுவதையே அவர் விரும்புகிறார், அதனால் நான் பரிசுத்தமுள்ளவனாக இருக்கப் போகிறேன்.

நான் பெருமையுடன் அல்ல, தாழ்மையுடன் நடக்கும் பொருட்டு தேவனை விசுவாசிக்கிறேன்! 

நான் எந்த நிலைக்கு உயர்ந்திருந்தாலும், நான் இன்னும் தாழ்மையுடன் இருக்கப் போகிறேன், காரணம் இயேசு தாழ்மையுள்ளவராகவே இருக்கிறார்.

அவர், "நான் தாழ்மையும் சாந்தமாயும் இருக்கிறபடியால் என் நுகத்தை, உங்கள் மேல் ஏற்று, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்" என்றார்.

இயேசு மனத்தாழ்மையுள்ளவராக இருக்கிறார் எனின், தங்கள் பெருமையின் மூலம் தங்களைப் பிரபலப்படுத்த முயற்சிக்கும் அல்லது மாயையாக வாழும்  இவர்களை விட நான் இயேசுவைப் பின்பற்றுவது மிகவும் நல்லது. 

BELIEVERS’ FELLOWSHIP

_______________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#853)]

Read 448 times