+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

இயேசுவே உங்கள் தேற்றரவாளர்!

1_E.png

நீங்கள் உபத்திரவத்துடன், புண்பட்டு அல்லது வேதனையிலோ இருப்பீர்களெனின், கர்த்தர் உங்களுக்கு ஆறுதல் வார்த்தைகளைச் மொழிந்தருளுவார்.

அவர் எப்பொழுதும் வலிமை மிக்கவராக இருப்பதால், கஷ்டமான சமயங்களில் உங்களுக்கு ஆறுதல் தேவைப்படும்போதெல்லாம் நீங்கள் கர்த்தருடைய வார்த்தையின் பக்கம் திரும்பலாம்.

அவருடைய மாறாத வாக்குத்தத்தங்கள் நிச்சயமாக உங்களுக்கு ஆறுதல் அளிக்கும்.

2 கொரிந்தியர் 1:3-4 -ஐ வாசியுங்கள்

உங்கள் நிலை அடிமட்டத்தில் இருந்தாலும், கர்த்தர் தாமே எப்போதும் உங்களை ஊக்குவித்து உயர்த்துவார்.

தாழ்ந்தவர்களை உயரத்தில் வைத்து, துக்கிக்கிறவர்களை இரட்சித்து உயர்த்துகிறார். யோபு 5: 10

நீங்கள் சோகமாகவும் தனிமையாகவும் இருக்கும்போதும், அவர் உங்களைப் பாதுகாப்பார் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.

நான் எல்லா நிலையிலும் மகிழ்ச்சியாகவும் சமாதானத்துடனும் இருப்பேன், நான் விசுவாசத்தால் இவற்றையெல்லாம் மேற்கொள்வேன் என்று கூறுவேன், ஏனெனில் " நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே..." எபிரெயர் 13:5; ரோமர் 15:13

கர்த்தர் உங்களுடனே இருக்கிறார்; பயப்பட வேண்டாம்; திகைக்க வேண்டாம். உங்கள் தேவன் உங்களைப் பலப்படுத்தி உங்களுக்கு சகாயம் செய்வார்; நீங்கள் ஒருபோதும் தோற்கடிக்கப்பட மாட்டீர்கள், ஏனென்றால் அவர் நீதியின் வலது கரத்தால் உங்களைத் தாங்குவார். ஏசாயா 41:10

நீங்கள் உங்களுக்கே கூறுங்கள்: "நான் கர்த்தருக்குக் காத்திருந்து ஸ்திரமாக இருப்பேன். என் இருதயத்தைப் திடப்படுத்திக் கொள்வேன்." சங்கீதம் 27:13-14

இயேசு கிறிஸ்துன் மூலமாக உண்டான தேவனுடைய அன்பிலிருந்து என்னை யாராலும் எதனாலும் பிரிக்க முடியாது என்பதை நான் உறுதியாக அறிவேன். ரோமர் 8:37-39

எனது சகல  கஷ்டங்களிலும் அவர் என்னை ஆறுதல்படுத்துகிறார். யோவான் 16:13

இன்று நான் என் இரட்சகருக்கு நன்றி கூறுகிறேன், ஏனென்றால் அவரில் அன்பு கொள்ளுகிறவர்களுக்கும் அவருடைய நோக்கத்தின்படி அழைக்கப்பட்டவர்களுக்கும் சகலமும் நன்மைக்கு ஏதுவாக  ஒன்றாகச் செயல்படுவதை நான் அறிவேன். ஆமென்! ரோமர் 8:28

இயேசு கூறினார், "என்னை நேசிப்பதானது என் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய உங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது. மேலும் நான் பிதாவிடம் கேட்பேன், அவர் உங்களுக்கு மற்றொரு தேற்றரவாளனை அளிப்பார், என்னைப் போன்று சத்திய பரிசுத்த ஆவியானவரும் உங்களுக்கு நண்பராக இருப்பார் - அவர் உங்களை ஒருபோதும் விட்டுவிட மாட்டார். .உலகம் அவரைப் பெறாது, ஏனென்றால் அவர்களால் அவரைப் பார்க்கவோ அல்லது அவரை அறியவோ முடியாது. ஆனால் அவர் உங்களுடனேயே இருந்து, உங்களுக்குள் வாழ்வதால் நீங்கள் அவரை நெருக்கமாக அறிவீர்கள்." யோவான் 14:15-17



விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#4)]

Read 734 times