+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

கர்த்தர் உங்கள் மேய்ப்பராயிருக்கிறார் (பகுதி 1)

1_E.png

சங்கீதம் 23:1 கூறுகிறது, "கர்த்தர் என் மேய்ப்பனாயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன்."

கர்த்தர் உங்கள் மேய்ப்பராகவும் உங்கள் சிறந்த நண்பராகவும் இருக்கும்போது, உங்களுக்கு எப்போதும் போதுமானதை விட அதிகமாக இருக்கும். அவர் உங்களைப் போஷிப்பார், உங்களை வழி நடத்தி, உங்களைப் பாதுகாப்பார், ஏனென்றால் அவர் எப்போதும் உங்களுக்காக இருக்கிறார்.

நாம் அவருக்கே சொந்தமான பிள்ளைகளாக இருக்கின்ற படியால் "என் பிதாவே!" "என் மெய்யான பிதாவே!"  என்று அழைக்கக் கூடிய புத்திர சுவிகாரத்தின் ஆவியை நம் இதயங்களில் விடுவித்ததாக வேதம் கூறுகிறது. (கலாத்தியர் 4:6)

"எவ்வளவு செய்தாலும் போதாதே" எனும் பயத்துடன் மதச் சடங்குளை செய்யும் பயத்தின் ஆவியை நீங்கள் பெறவில்லை. நீங்கள் "முழுமையாக ஏற்றுக்கொள்ளும் ஆவியை" பெற்று தேவனுடைய  குடும்பத்தில் இணைக்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் ஒருபோதும் அனாதையாக உணர அவசியமில்லை, ஏனென்றால் அவர் உங்களுக்குள் எழுந்தருளும்போது, உங்களுடைய ஆவி  அவருடன் இணைந்து "அப்பா பிதாவே!" எனும் மென்மையான பாச வார்த்தைகளைக் கூறக்கூடியதாக உள்ளது. ரோமர் 8:15

கர்த்தருக்குப் பலியிடுவதற்காக ஆபிரகாமிற்கு ஒரு ஆட்டுக்குட்டி தேவைப்பட்டு கேட்டபோது, கர்த்தர் தாமே தம்மை, "யெகோவாயீரே" என்று வெளிப்படுத்தினார், அதாவது, "கர்த்தர் பார்த்துக் கொள்வார்."

ஆபிரகாம் அந்த இடத்துக்கு யேகோவாயீரே என்று பேரிட்டான்; அதினாலே கர்த்தருடைய பர்வதத்திலே பார்த்துக்கொள்ளப்படும் என்று இந்நாள்வரைக்கும் சொல்லப்பட்டு வருகிறது. ஆதியாகமம் 22:14

எனவே, உங்கள் வாழ்க்கையில் ஒரு தேவை எழுவதற்கு முன்பே, அவர் அதைக் கண்டு, அவர் உங்களுக்கு வழங்குவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

தேவன் தாமே இப்போது உங்கள் “பரலோகத் தகப்பனாக” இருப்பதால், உங்களுக்குத் தேவையான அனைத்தையும் வழங்க இயேசு கிறிஸ்து மூலம் அவர் உங்களுடன் உடன்படிக்கை செய்தார்.

கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். சங்கீதம் 37:4

தேவனோடு உறவுகொண்டு, அவரை சேவிப்பதன் மூலம் நாம் மகிழ்வதையே அவர்  விரும்புகிறார். தேவனோடு உறவுகொள்வதன் மூலம் உங்கள் மகிழ்ச்சியைத் தேடுங்கள். அப்போதுமெய்யாகவே உங்கள் இதயம் விரும்பும் அனைத்தையும் அவர் அருளுவார்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#7)]

Read 647 times