+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

மன்னிப்புக் கொடாமை ஒரு திருடன்! (பகுதி 2)

1_E.png

அநேக கிறிஸ்தவர்கள் அகால மரணமடைவதற்கு பெரும்பாலும்  தேவனுடைய  வார்த்தைக்குக் கீழ்ப்படியாததே காரணமாகும்.

மன்னிப்பின்மை  மெய்யாகவே ஜீவனத்தைத் திருடும் ஒரு திருடனாவான்.

தேவனுடைய வார்த்தையின் கொள்கைகளில் செயல்படுவதன் மூலம் நம் வாழ்நாளை நீடிக்கச்  செய்யக் கூடுமாகும்.

யோவான் 10:10-ல் இயேசு கூறியதாவது ஒரு திருடனின் மனதில் ஒரே ஒரு விஷயம் தான் இருக்கிறது – அவன் விரும்புவதெல்லாம் திருடவும், கொல்லவும், அழிக்கவுமேயாகும்.

ஆனால் நீங்கள் எதிர்பார்ப்பதை விட எல்லாவற்றையும் உங்களுக்கு ஏராளமாக வழங்கவும், நிரம்பி வழியும் வரை வாழ்க்கையை அதன் முழுமையுடன் அனுபவிக்கச் செய்யவுமே நான் வந்தேன்!

விசுவாசம் என்பது நாம் வெற்றி பெறுவது எப்படி என்பதைப் பற்றியாகும். ஆனால் நாம் மன்னிக்காதவிடத்து அந்த விசுவாசம் பலிப்பதில்லை.

நாம் விசுவாசத்தை செயற்படுத்த விரும்புவோமெனில், நாம் மன்னிப்பில் நடப்பது அவசியம்!

மாற்கு 11:22-26-ஐ வாசியுங்கள்; எபிரெயர் 12:12-15; மத்தேயு 6:14-15.

பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட கூட்டத்தில், ஒரு பெண்மணி ஒரு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார், அது அவளுக்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்தியது.

அவள் சொன்னாள், “நான் கடவுளுடைய வார்த்தையைக் கற்கப் போகிறேன்; ஒரு இரவு, நான் குணப்படுத்தும் கூட்டத்தில் வந்து என் சுகத்தைப் பெறுவேன்.”

ஒரு காலைக் கூட்டத்தின் போது, ​​ தேவனுடைய ஊழியக்காரன் மன்னிப்புப் பற்றியும் மன்னிக்காமையானது மக்களை சுகம் பெறுவதிலிருந்து தடுக்கிறது எனவும் அது பிசாசுக்கான கதவைத் திறந்துக் கொடுக்கிறது எனவும் போதித்தார்.

கூட்டம் முடிந்ததும், அந்த பெண்மணி இருபது வருடங்களாக பேசாத தன் சகோதரனை தொடர்பு கொண்டுப் பேசினாள்.

அவர்கள் தொலைபேசியில் பேசி அப்போதே தங்கள் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்துக் கொண்டனர்.

அந்தப் பெண்ணுக்கு அதைச் செய்ய மனம் வரவில்லை. ஆனாலும் அவள் அதை செய்ய முடிவு செய்தாள்.

அன்பில் நடக்கத் தீர்மானித்தாள்.

அன்று இரவு கூட்டத்திற்குச் சென்றாள்; சுகத்திற்கான முன்னால் சென்று ஜெபம் செய்வதற்கும் முன்பதாக, நோய்க்கான சகல அறிகுறியும் அவள் உடலை விட்டு வெளியேறியது. அவள் குணமடைந்தாள்!

இதைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைக் குறித்து நியாயந்தீர்க்க முயற்சிக்காதீர்கள்.

உங்கள் இதயத்தை ஆராய்ந்து அதை உங்கள் சொந்த வாழ்க்கையில் அதனைப் பிரயோகியுங்கள்.

நீங்கள் மன்னிக்காவிடின் பொல்லாங்கனின் கரத்திற்கு ஒப்படைக்கப்படுவதுடன், சாத்தான் உங்கள் வாழ்க்கையில் இலவச அணுகலைப் பெறுவான்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#24)]

Read 667 times