+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South
வாழ்க்கையில் ஒரு திடமான பாத்திரமாவது எப்படி? (பகுதி 1)
விபச்சாரியாக இருந்த ராகாப் புதிய ஏற்பாட்டில் விசுவாசத்தின் வீராங்கனையாக குறிப்பிடப்பட்டுள்ளாள்.
அவளுடைய பெயர் ஆபிரகாமுடன் சேர்ந்து வருகிறது.
ஏனென்றால் அவளுக்கு விசுவாசம் ஏதோ வார்த்தையில் மட்டும் அல்ல,அந்த விசுவாசத்தை அவளுடைய செய்கையின் மூலமும் நிரூபித்தாள்.
தேவன் விரும்புவது, விசுவாசத்தைத் தக்க வைத்துக் கொண்டு அந்த விசுவாசத்தோடு சேர்த்து உங்கள் கிரியைகளையும் தொடர்புடையச் செய்வதாகும். அதாவது அதற்கேற்ற செயலைக் கொண்டிருப்பதாகும்.
நீங்கள் காத்திருக்கும் புத்தாண்டை எதிர்கொள்ள இதுபோன்ற ஒரு பாத்திரமாக மாறுவது உங்களுக்குத் தேவைப்படும்.
இப்பொழுது நீங்கள் கூறுவீர்கள், போயும் போயும் ஒரு விபச்சாரியின் பாத்திரம் தான் எனக்குத் தேவையோ? இல்லை, அவள் மனந்திரும்பினாள். தேவனு டைய மகத்துவங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட அவள் மனந்திரும்பினாள்.
யோசுவா 2ம் அத்தியாயத்தைப் பார்ப்போம். இங்கே நாம் பார்க்கும் கட்டத்தில் மோசே இறந்துவிட்டிருந்தார்.
வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு மக்களை வழிநடத்தும் பொறுப்பு யோசுவாவிற்கு நியமிக்கப்பட்டிருந்தது.
அப்பொழுது யோசுவா வாக்களிக்கப்பட்ட தேசத்திற்கு இரண்டு உளவாளிகளை அனுப்பி தேசத்தை வேவு பார்க்க நினைத்தார்.
இந்த இரண்டு உளவாளிகளும் உள்ளே வந்தபோது, அவர்களால் சுதந்திரமாக நடமாட முடியவில்லை.
இறுதியாக, அவர்கள் இந்த விபச்சாரியின் வீட்டிலேயே தஞ்சம் புகுந்தார்கள். அதன் பிறகு அவள் அவர்கள் இருவருக்கும் மறைவிடம் கொடுத்தாள். அவள் அந்த இருவரிடமும் பேசினாள்.
2024ம் ஆண்டை எதிர்கொள்ளும் நோக்குடன் அவளுடைய கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்கிறேன்.
அவள் ஒரு அன்னிய ஜாதியான பெண் என்று நாம் நினைப்போம். அவள் விசுவாசி அல்ல.
ஆனால் இரண்டு உளவாளிகள் உள்ளே வந்ததும், நான் கேள்விப்பட்ட இந்த தேவனைப் பற்றி நான் இன்னும் அதிகமாக தெரிந்துகொள்ள விரும்புகிறேன் என்றாள்.
உங்களைப் பற்றி கேள்விப்பட்டவுடனே எங்கள் அனைவரின் இதயங்களும் கரைந்து போயிற்று.
எகிப்தியரின் வலிமை மிக்க படையை அழித்து செங்கடல் வழியாக தேவன் மீட்டுக்கொண்டு வந்த, எகிப்தில் அடிமைகளாயிருந்த ஜனங்கள் நீங்கள் தான். அத்தைகைய ஒரு படையைத்தான் நீங்கள் அழித்தீர்கள்.
விசுவாசிகளின் ஐக்கியம்
_____________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#30)]