+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பாகம் 5)

1_E.png

தேவன் பெருமையுள்ளவர்களை எதிர்க்கிறார், ஆனால் அவர் தாழ்மையுள்ளவர்களுக்கு அதிகதிகமானகிருபையையும் தருகிறார் என்பதே ஒரு கொள்கையாக இருக்கிறது.

எனவே நீங்கள் தேவனிடமிருந்து பெற விரும்புவது அதிக கிருபையையா அல்லது எதிர்ப்பையா?

தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் அதிக கிருபையைத் தருவதோடு, பெருமையுள்ளவர்களையோ அவர்  எதிர்க்கிறவராக இருக்கிறார்.

(யாக்கோபு 4:6)

அதனால் நான் பெருமையுடைய இதயமுள்ள மக்களிடையே இருக்க அவசியமில்லை.

நீங்கள் பழகும் நபர்களிடமிருந்து பலவற்றைப் பெறுவீர்கள்..

கோபக்காரனுக்குத் தோழனாகாதே; அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக் கொள்வாய் என வேதம் கூறுகிறது.

(நீதிமொழிகள் 22:24)

ஆதலால் நான் தவறான நபர்களுடன் பழகப் போவதில்லை.

நான் யாரோடு கூடுகிறேன் என்பது மிகவும் முக்கியம்.

ஏனென்றால் அது என் வாழ்க்கையில் ஒரு வகையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

நான் செழிக்கப் போகிறேனா அல்லது நான் தோற்றுப் போகிறேனா?

நான் வெற்றியாளராக இருக்கப் போகிறேனா அல்லது தோற்றவனாக இருக்கப் போகிறேனா?

சகல நன்மையான காரியங்களையும் கர்த்தர் எனக்காக தயார் செய்து விட்டார்.

அவர் நமக்காக வைத்திருப்பதை நாம் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்.

இப்போது இந்த வசனம் என் இதயத்திற்குச் சென்றுள்ளதால், நான் ஒவ்வொரு நாளும் அதை அறிக்கையிடுகிறேன்.

சில நாட்களில் நான் அதை மறந்து போனாலும், மீண்டும் நான் அந்த வசனத்திற்குச் சென்று வாசிக்க ஆரம்பிக்கிறேன்.

1 தீமோத்தேயு, 6;17 - 19:

17 இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின் மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும்,

18. நன்மை செய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்,

19. நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#854)]

Read 610 times