+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 11)

1_E.png

தேவனுடைய  வல்லமையோடு நாம் நாம் இணைவதற்கான ஒரே வழி விசுவாசத்தின் மூலமாக மட்டுமேயன்றி பயத்தின் மூலமாக அல்ல.

நாம் பயத்தோடு நடக்கும்போது தேவன் பிரியப்படுவதில்லை.

தேவன் பயம் அல்ல; தேவன் விசுவாசமாகும்.

நான் உங்களுக்கு பயத்தின் ஆவியைக் கொடுக்கவில்லை என்ஷ கர்த்தர் உரைக்கிறார்; நான் உங்களுக்கு விசுவாசத்தின் ஆவியையே கொடுத்திருக்கிறேன்

"நான் இருக்கிறேன்" என்று நீங்கள் விசுவாசிக்கும்படிக்கு, நான் உங்களுக்கு விசுவாசத்தின் ஆவியைக் கொடுத்திருக்கிறேன்.

 "நான் இப்போது இருக்கிற வண்ணமாகவே," இருந்துக் கொண்டு நான் உங்களுக்கு பலனளிக்கிறேன்.

நீங்கள் என்னைத் தேடும்போது; நான் பலனளிப்பேன்.

உபாகமம் 30 :மற்றும் வசனம் எண் 14:

"நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது."

எனவே, உங்கள் ஆசீர்வாதம் எங்கே?

அது உன் நாவில் இருக்கிறது, உன் வாக்குமூலத்தில் இருக்கிறது, உன் இதயத்தில் இருக்கிறது, உன் வாயில் இருக்கிறது.

நான் அதைப் பேசுவதன் மூலமாகப் பெறுகிறேன். 

நான் பேசுவதன் பேரிலேயே என் விசுவாசம் செயல்படுகிறது.

அறிக்கைச் செய்தல் என்பது, என்பது சாதிக்க வேண்டிய விஷயங்களைச் வாயினால் சொல்லுகிற ஒரு செயல்அல்ல.

அது ஒரு நெப நேரத்தில் செய்யும் ஒரு அறிக்கைச் செய்தல் போல இருக்கலாம்.

"நான் சில வேத வசனங்களை கூறப் போகிறேன்," ஆனால் நீங்கள் அதை ஒரு வாழ்க்கைமுறையாக மாற்ற வேண்டும். இது ஒரு வாழ்க்கை முறை.

"நான் பயப்பட மாட்டேன்." இது ஒரு வாழ்க்கை முறை.

நான் தேவன் உயிருள்ளவராக இருக்கிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன்; அது ஒரு வாழ்க்கை முறையாவதுடன் அவர் பலனளிக்கிறவர் என்பதை விசுவாசிக்கிறேன்; இதுவும் ஒரு வாழ்க்கை முறையாகும்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#860)]

Read 477 times