+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South
2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 14)
உங்கள் வாயிலிருந்து வருபவற்றை வாரத்தையாகப் பேசுங்கள்.
நீங்கள் விசுவாசிப்பதை வாய்மொழியாக கூற வேண்டும்.
உங்கள் முன்னிலையில் முட்டுக்கட்டைகள் இருக்கும் போது, அவற்றை நோக்கிப் பேசுங்கள்.
இயேசு, மலையைச் சுற்றி வருவதை விட்டு விட்டு, மலையிடம் பேசு என்றார்.
மாற்கு 11 க்கு செல்வோம்.
மார்க் 11 ;22 இல், இயேசு கூறினார், "தேவனில் விசுவாசமாயிருங்கள்," அல்லது, வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவனின் விசுவாசத்தைக் கொண்டிருங்கள்;
“எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்."
இப்போது இயேசு, “மலையிடம் பேசு; மலையைப் பற்றிப் பேசாதே; மலையோடு பேசு; அதை அகற்றிவிட்டுக் கடலில் போடக் கட்டளையிடு.
ஒரு சமயம் ஒரு பிரசங்கியார் இந்த வேதத்தை அப்படியே வாசிப்பதைக் கேட்டேன்.
அவர் சொன்னார், சரி, உங்கள் வாழ்க்கையில் ஒரு மலை இருந்தால், மலையைக் கடந்து செல்லுங்கள்; அல்லது மலையைச் சுற்றிச் செல்லுங்கள்; அல்லது மலைக்கு இடையில் ஒரு சுரங்கப்பாதை அமைத்து அதன் வழியாக செல்ல வேண்டும்.
அவர் வேதத்திற்கு முரணானதையே கூறினார்.
ஆனால் இயேசு கூறியது என்ன? அதற்கு எதிராகப் பேசுங்கள் என்றார். அந்த மலையை அகற்றக் கட்டளையிடுங்கள்என்றார். காரணம் உங்களுடைய விசுவாசத்திற்கு தடையாக எதுவும் இருப்பதை அவர் விரும்பவில்லை - ஆதலால் உங்களுக்கு இடையில் நிற்கும் எதற்கும் பேசுங்கள்.
அது ஒரு நோயாக இருந்தால், உங்கள் நோய்க்கு எதிராகப் பேசுங்கள்
"ஏ நோயே, நான் இயேசுவின் நாமத்தில் உனக்குக் கூறுகிறேன்."
"இப்போது இயேசுவின் நாமத்தில் வெளியே போ!"
"இப்போது இயேசுவின் நாமத்தில் வலியே போ!"
அப்படித்தான் மலைக்கு எதிராக பேசுவது.
விசுவாசிகளின் ஐக்கியம்
_____________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#863)]