+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

தேவனுடைய உடன்படிக்கையின் வாக்குத்தத்தங்கள் நமக்கே சொந்தம்!

1_E.png

இயேசு சகல விசுவாசிகளுடனும் இரத்தத்தினாலாகிய உடன்படிக்கையைச் செய்தார்.

நாம் இந்த உடன்படிக்கையின் மக்களாக இருப்பதால், அவர் நம்மைப் பாதுகாப்பதாக வாக்களித்துள்ளார்.

எனவே, "ஆண்டவரே, இந்த உடன்படிக்கையில் உள்ள ஒவ்வொரு வாக்குறுதியும் நமக்குச் சொந்தமானது" எனக் கூறுவோம்.

அந்த உடன்படிக்கையின் வாக்குறுதிகளை நிறைவேற்ற  தேவன் எப்போதும் காத்துக் கொண்டிருக்கிறார்.

நாம் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே அவருடைய விருப்பமாக இருக்கிறது.

தேவனின் பிள்ளைகள் என்ற வகையில், அவருடைய சுதந்திரத்திற்குள் வாழ்வது நிச்சயமாக தேவனின் விருப்பமாகும்.

நாம் பயந்தாங்கொள்ளிகளாக அடிமைத்தனத்தில் வாழ்வது அவருடைய விருப்பம் அல்ல.

அவர், " நீதியினால் ஸ்திரப்பட்டிருப்பாய்; கொடுமைக்குத் தூரமாவாய்; பயமில்லாதிருப்பாய், திகிலுக்குத் தூரமாவாய், அது உன்னை அணுகுவதில்லை" என்கிறார். 

ஏசாயா 54:14-ஐ வாசியுங்கள்.

நீதி என்பது தேவனால் நமக்குக் கொடுக்கப்பட்ட ஒரு புதிய சுபாவமாகும். இந்த புதிய சுபாவத்தில் பயம் இல்லை.

ஆகவே, நாம் அவருடைய பிள்ளைகள் என்றும், பயப்படுவதற்கு நமக்கு ஒன்றுமில்லை என்பதன் பேரிலும் உறுதியாய் நிற்போம்.

எப்பொழுதும் எனக்குச் செவிகொடுப்பவன், அச்சமின்றி, நம்பிக்கையுடனும், தைரியத்துடனும் இடையூறற்ற பரலோக அமைதியிலும் வாழ்வான் என்கிறார் தேவன்.

எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான். 

நீதிமொழிகள் 1:33-ஐ வாசியுங்கள்

நினைவில் கொள்ளுங்கள்: தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார். 

2 தீமோத்தேயு 1:7

“அன்பிலே பயமில்லை; பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்; பயமானது வேதனையுள்ளது, பயப்படுகிறவன் அன்பில் பூரணப்பட்டவன் அல்ல.” 1 யோவான் 4:18

எனவே நாம் மிகுந்த நம்பிக்கையுடன், அதினாலே நாம் தைரியங்கொண்டு: கர்த்தர் எனக்குச் சகாயர், நான் பயப்படேன், மனுஷன் எனக்கு என்ன செய்வான் என்று கூறலாமே...எபிரெயர் 13:6

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#6)]

Read 661 times