+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

விசுவாசத்தில் திடமாக இருங்கள்! (பகுதி 2)

1_E.png

ஆபிரகாம்  தேவனிடமிருந்துஅந்த வாக்குறுதியைப் பெற்றார். “நான் உன்னைப் பல தேசங்களுக்குத் தகப்பனாக ஆக்கினேன்” என்று வேதம் கூறுவதே அதன் அர்த்தம்.

அவர் நம்முடைய முன்மாதிரியும்  விசுவாசத்தின் தந்தையுமாக இருக்கிறார். ஏனென்றால் தேவனுடைய பிரசன்னத்தில் தேவனால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்றும் இல்லாதவற்றை உள்ளதாக்கவும் அவரால் கூமென்பதையும்வெர் விசுவாசித்தார். 

ஆபிரகாம் தன் பிரச்சனையை பார்க்கவில்லை.

அவர் தனது வயதைக் கூட கருத்தில் கொள்ளவில்லை.

ஆபிரகாம் கிட்டத்தட்ட நூறு வயதாக இருந்தபோதும் கூட அவருடைய விசுவாசம் பலவீனமடையவில்லை, 

தான் பெலனற்றவன் என்பதையும், அவரது மனைவி சாராவால் குழந்தைகளைப் பெற முடியாது என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

ஆனால் ஆபிரகாம்  தேவனுடைய வாக்குத்தத்தத்தை ஒருபோதும் சந்தேகிக்கவே அதைப் பற்றி வினவவோ இல்லை.

அவருடைய விசுவாசம் அவரை பலப்படுத்தயைதோடு, அவர் சகல மகிமையையும் கர்த்தருக்கே கொடுத்தார்.

தேவன் தாமே தம்முடைய வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும் அளவுக்கு அவர் வலிமையானவர் என்று அவர் உறுதியாக நம்பினார்.

ஆபிரகாம் தேவனை மகிமைப்படுத்தினார், அவருடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக் கொண்டார்.

தேவனை மகிமைப்படுத்துவதும் துதிப்பதும் மிகவும் இன்றியமையாதது, அது நமது விசுவாச வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

வேதவசனங்களின்படி பொறுமையுடனும் நிலைத்தன்மையுடனும் காரியங்களைச் செய்யுங்கள், ஏனென்றால் பலர் பொறுமையின்மையால் வழியில் விழுந்து தோலிவியடைகின்றனர்.

விசுவாசத்தையும் பொறுமையையும் ஒன்றாக இணைப்பதன் மூலம், உங்களால் தேவனுடைய வாக்குத்தத்தங்களை உரிமைக் கொள்ளக் கூடும்! எபிரெயர் 6:12

எனவே சூழ்நிலைகளைப் பார்த்து அவற்றைப் பற்றி பேசுவதன் மூலம் உங்கள் விசுவாசப் பயணத்தை சுருக்கிக் கொள்ளாதிருக்க நினைவில் வைத்து கொள்ளுங்கள், 

வாழ்வின் பரலோக வார்த்தைகளைக் கற்றறிந்து, வெற்றி  வாழ்க்கை வாழ வேண்டுமெனின், சுபாவ ரீதியாக காண்பவற்றிற்கு எதிராக அவற்றை அறிக்கையிடவும்

! யோபு 22:21

உங்களுக்குள் வல்லமையுடன் செயல்படும் பரிசுத்த ஆவியின் பலத்தை விட பெரிய சக்தி எதுவும் தேவையில்லை.

உங்களுக்குத் தேவைப்படுவது விசுவாசத்தால் பெலப்பட்டு வாழ்வதும், விசுவாசம் நிறைந்த வார்த்தைகளைப் பேசுவதுமாகும். நிச்சயமாக அது உங்களை வாழ்க்கையில் உயர்த்தும்.

அல்லேலூயா!

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#10)]

Read 609 times