+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

நிதி நிலைக்கு நல்ல உக்கிராணக்காரர்களாக இருங்கள்! (பகுதி 1)

1_E.png

உக்கிராணத்துவத்தில் நிதியை விட அதிகமான விடயங்கள் உள்ளடங்குகின்றன. அதற்கு பணம் தொடர்பான நிர்வாகமும் உள்ளடக்கப்படுகிறது.

பணமானது சில வழிகளில், நமது வாழ்க்கை, நமது நேரம், திறமைகள் உட்பட சம்பளத் தரவுகளை பிரதிபலிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்

நாம் நேரத்தைச் செலவழித்து பணம் சம்பாதிக்கிறோம்; அதே வண்ணமாக நம் திறமையை பயன்படுத்தியும் பணம் சம்பாதிக்கிறோம். இவ்விதமாக நமது பணம் நம் வாழ்க்கையை பிரதிநிதிப்படுத்துகிறது.

நம்முடைய நேரம், திறமைகள் மற்றும் பணம் அனைத்தையும் தேவ மகிமைக்காக முகாமைத்துவம் செய்ய வேண்டும் என்று தேவனுடைய வார்த்தை நமக்குக் கற்பிக்கிறது!

நாம் நமது பணத்தை தேவனுக்கு கொடுக்கும்போது, ​​நம் வாழ்க்கையை தேவனுக்குக் கொடுக்கிறோம்.

நாம் நமது வருமானத்தில் 10%, தேவனுக்கு தசமபாகமாக கொடுக்கும்போது—நம்முடைய முழுச் சமபாத்தியமும் தேவனுக்குச் சொந்தமானது என்பதை ஒப்புக்கொள்கிறோம்.

"என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டுவாருங்கள்; அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடங்கொள்ளாமற்போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்கமாட்டேனோவென்று அதினால் என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். பூமியின் கனியைப் பட்சித்துப் போடுகிறவைகளை உங்கள் நிமித்தம் கண்டிப்பேன்" மல்கியா 3:10-11

நம்முடைய பணம் முழுவதும் தேவனுக்குச் சொந்தமானது என்பதை நாம் அறியாததால், சில சமயங்களில் பணப் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

ஒருவேளை நாம் நம்முடைய பண விஷயங்களில் தேவனுக்கு முதலிடம் கொடுக்காமலிருக்கலாம்.

ஒருவேளை நாம் நமக்குத் தேவை என்று நினைக்கும் காரியங்களுக்காக அளவுக்கதிகமாக  செலவு செய்துக் கொண்டிருக்கலாம்.

நாங்கள் நல்லதொரு பண முகாமையாளராக இருக்காததின்​ விளைவாக, பணப் பிரச்சினைகள் ஏற்படலாம்.

சில சமயங்களில் நமக்குப்  பணப்பிரச்சினைகள் ஏற்படக் காரணம் தேவனுக்குத் தசமபாகம் கொடுக்காததால் ஆகும்.

அப்போது அவர் தமது முழு ஆசீர்வாதமும் நமக்குக் கிடைக்கப்படாதவாறு தடுத்து நிறுத்துகிறார், அது நம்மை வருத்தமடையச் செய்கிறது.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#14)]

Read 604 times