+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

எமக்கு அறிவு தேவை! (பகுதி 2)

1_E.png

தேவனின் தெய்வீக வல்லமையே இவற்றை நமக்குப் பெற்றுத் தருகிறது.

எங்கனம்? தேவனின் அறிவின் மூலமாகும்.

இவைகள் அறிதலின் மூலமும் விசுவாசிப்பதன் மூலமும் மற்றும் வாக்குத்தத்தங்களைக் கொண்டு கிரியைச் செய்வதன் மூலமாகவே கிடைக்கப் பெறுகிறது. அப்பொழுது நீங்கள் கர்த்தரின் தெய்வீக வழங்குதலில் பங்கு பெறுவீர்கள்.

அதை அறியுங்கள்.

அதை விசுவாசியுங்கள்.

அதன்படி செயல்படுங்கள்.

அதனைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

கர்த்தர் அதை உங்களுக்கு வழங்கியுள்ளார்; ஆனால் அதனை அறியாத பட்சத்தில், நீங்கள் அதில் நுழைய மாட்டீர்கள்.

நீங்கள் சாத்தானின் பொய்களை நம்புவதால் தேவையற்ற பிரச்சனைகள், உபத்திரவங்கள் துன்புறுத்தல்கள் மற்றும் தீங்குகளுக்கு அகப்பட்டு விடலாம்.

தேவனைப் பற்றிய அறிவு இல்லாமையால், “தேவன் சில சமயங்களில் ஆபத்துக்களை அனுப்பக் காரணம், உங்களுக்குக் கற்பிக்கவும் உங்களை வலிமையாக்கவும் ஆகும்” எனக் கூறும் மதப் போதனைகள் மூலம் கேள்விப்பட்ட காரியங்களை விசுவாசிப்பீர்கள்.

இது உங்களுக்குச் சரியானதாகத் தோன்றும், ஆனால் அது உண்மையல்ல.

அது  தேவனுடைய வார்த்தையில் கூறுப்படுகிற ஒரு விடயம் அல்ல.

அறிவு மிக முக்கியமானது, ஆனால் அறிவு மட்டும் பதில் இல்லை.

இது ஞானத்துடன் இணைக்கப்பட வேண்டும்.

ஞானம் என்பது அறிவைப் பயன்படுத்தும் திறனாகும்.

எந்தவொரு சூழ்நிலையிலும் ஞானம் இல்லாமல் அறிவை செயற்படுத்துவது  போதுமானதல்ல. 

இங்குதான் பல கிறிஸ்தவர்கள் தவறிழைக்கிறார்கள்.

பிரச்சனைகள் மற்றும் இடர்கள் வரும்போது தான் அவர்கள் ஞானத்தைத் தேடுவார்கள், ஆனாலும் அது கிடைப்பதில்லை.

காரணம் என்ன? பயம் வந்துவிடுகிறபடியாலாகும்.

பயம் தேவனின் ஞானம் கரை புரண்டு ஓடுவதைத் தடைச் செய்யும்.

பயம் எனும் சக்தியானது தேவனின் ஞானத்தை வரவிடாமல் தடுத்து, விசுவாசத்தை செயல்படவிடாமல் தடுக்கும்.

கர்த்தருடைய ஞானத்திற்குச் செவிசாய்ப்பவன் தீங்கைக் கண்டு பயப்படாது அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழுவான். 

நீதிமொழிகள் 1:20-33-ஐ வாசியுங்கள்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#29)]

Read 507 times