+94722340440 | 0112719730 | 2nd Floor, 28 Galle Road, Dehiwala South. Sri Lanka.

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 20)

1_E.png

வேதத்தில் உள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தங்களும் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது, நீங்கள் இயேசுவில் இருப்பதால் தேவனுடைய வாக்குத்தத்தங்களை தொடர்ந்தும் பேசுங்கள்.

"நான் பாரிய மனந்திரும்புதலையும் வெகுஜன மறுசீரமைப்பையும் பார்க்கப் போவதால் எனது வார்த்தைகளை தேவனுடைய வார்த்தையுடன் வரிசைப்படுத்துவேன்” என இந்த வருடம் திடசங்கற்பம் பூணுங்கள்.   

ஒரு பாவி மனந்திரும்புவதுதான் பரலோகத்தில் இருக்கும் மிகப்பெரிய மகிழ்ச்சியாகும் அப்படியாயின், சபை அதிலும் குறிப்பாக நீங்களும் நானும் எவ்வளவு அதிகமாக சந்தோஷப்பட வேண்டும்?

ஒரு பாவி மனந்திரும்பும்போது, பரலோகம் மகிழ்ச்சியடைகிறது, ஆகவே ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவதைக் காணும்போது திருச்சபை மகிழ்ச்சியடையத் தொடங்க வேண்டும்.

இது சபைகளின் பாரிய மனந்திரும்புதலின் வருடமாகும். மேலும் இது உலகிலுள்ளவர்களை நோக்கியும் பெருக்கெடுக்கப் போகிறது.

உலகில் உள்ள மக்கள் மனந்திரும்பப் போகிறார்கள், அவர்கள் "நாங்கள் சபைகளுக்குச் செல்லப் போகிறோம்; நாங்கள் கர்த்தரை விசுவாசிக்கப் போகிறோம்" என்று கூறப் போகிறார்கள்.

"இப்பேர்பட்ட அன்பைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை, இந்த வகையான விசுவாசத்தைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை.

“இதுபோன்ற அற்புதங்களை நாங்கள் பார்த்ததேயில்லை. இதுபோன்ற சுகமாக்குதல்களை​ நாங்கள் கண்டதேயில்லை" என்று கூறப்போகிறார்கள்.

தேவன் தாமே மக்களுக்கு இவ்வகையான பாரிய மனந்திரும்புதலையும் அதன் வாயிலாக மக்களுக்கு மறுசீர்படுத்தலையும் கொடுக்கப் போகிறார்.

பாரிய மனந்திரும்புதலானது வெகுஜன மறுசீரமைப்பைக் கொண்டுவரப் போகிறது.

இந்த நாட்களைக் காண நீங்களும் நானும் உயிருடன் இருப்பதற்காகவும் கர்த்தருடைய அனுக்கிரகத்திற்காகவும் ஸ்தோத்திரம்.

மக்கள் கண்ணீருடன் வந்து, "இயேசுவே, நாங்கள் உம்மை நேசிக்கிறோம், நாங்கள் மனந்திரும்ப விரும்புகிறோம், நாங்கள் உம்மை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொள்கிறோம்" என்று கூறுவார்கள்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#869)]

Read 2205 times