+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

வாழ்க்கையில் உறுதியான பாத்திரமாக இருப்பது எப்படி? (பாகம் 3)

1_E.png

உங்கள் சொந்த மனித வலிமையின் மீது விசுவாசத்தை வைக்காதீர்கள். வானத்திற்கும் பூமிக்கும் தேவனாகிய கர்த்தர் மீது உங்கள்  விசுவாசத்தை வையுங்கள்.                                                                     

            

ராகாப் ஒரு அபாயகரமான தீர்மானத்தை எடுத்தாள். எல்லோரும் இஸ்ரவேலின் தேவனை நிராகரித்தபோது, தான் தேவனை விசுவாசிப்பதாக முடிவு செய் செய்தாள்.

சில சமயங்களில் நாம் நம்பும் விதத்தில் எல்லோரும் நம்ப வேண்டும் என்று நினைப்பதுண்டு. நான் நம்புகிற விதமாக அவர்கள் நம்பவில்லை என்றால், அவர்கள் நம்புகிற விதமாக  நான் நம்ப முனைவதுண்டு.

           

நீங்கள் பணிபுரியும் இடமாக இருக்கலாம்.உங்கள் அக்கம் பக்கத்தில் வசிக்கின்ற நெருங்கியவர்களாக இருக்கலாம்.

நீங்கள் நம்புவதை அவர்கள் நம்பாதிருக்கலாம். நீங்கள் நம்புவதை அவர்கள் நம்புவதற்கான அவசியமும் இல்லை.

நீங்கள் தேவன் மீது வைத்துள்ள இம்மியளவு விசுவாசத்தையும் அழித்து விடுவது தான் அவர்களின் தேவை.

நீங்கள் தவறான நபர்களுடன் சகவாசம் கொள்வீர்களானால், நீங்களும் அழிக்கப்படுவீர்கள். காரணம் அவர்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கமாகும்.

அவள் தன்னை வேறுபிரித்துக் கொள்ளத் தீர்மானம் பண்ணினாள். அவள் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்த தேவன்மீது விசவாசம் கொள்ளத் தீர்மானித்தவளாக தன் உயிரைக் கூட பொருட்படுத்தாமல், இரண்டு வேவுகார்களையும் ஒளித்து வைத்தாள்.

                          

அவள் தன்னை வேறுபிரிக்க முடிவு செய்தாள், அவள் சொன்னாள், நான் இப்போது வானத்திற்கும் பூமிக்குமான தேவனை விசுவாசிக்கிறேன்.

அவள் இரண்டு ஒற்றர்களிடம் பேசி, நீங்கள் என்னை பாதுகாப்பதற்கு என்னுடன் உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும் என்றாள்.

தேவனின் பட்டயம் இந்த தேசத்தின் மீது வரும்போது, ​​நீங்கள் என்னைப் பாதுகாக்க வேண்டும். எனவே, அந்த இரண்டு வேவுகார்களும் அவளோடு ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டார்கள்.

            

அதன்பிறகு என்ன நடந்தது? அவளும் அவளுடைய குடும்பத்தாரும் காப்பாற்றப்பட்டார்கள். ஏனையோர் அனைவரும் இரையாகினர். அவள் தனது விசுவாசத்தை தனது முழு குடும்பத்திற்காகவும் பயன்படுத்தினாள்.

அவள் தன்னைப் பற்றி  மட்டும் நினைக்காமல் என்னுடன் ஒரு உடன்படிக்கை செய்யுங்கள் என்று கூறினாள். அதன் பிறகு தேசத்தின் மீது நியாயத்தீர்ப்பு வந்தபோது அந்தக் குடும்பம் காப்பாற்றப்பட்டது.

                                        

நான் உங்களுக்குக் கூறிய அந்த முதல் கதாபாத்திரம், ஒரு உறுதியான பாத்திரம். எதற்கும் தகுதியற்ற பெண்ணின் உறுதியான மனப்பான்மையைக் கொண்டு தேவன் அவளை உயர்த்தி ஆசீர்வதித்தார்!

             

வேத வசனங்கள்: யோசுவா 2:1—24; எபிரெயர் 11:31

https://youtu.be/KMHQ6tGEQGo

எங்கள் Youtube சேனலில் முழு செய்தியையும் பாருங்கள்:

https://youtu.be/76eoscBxqxY

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#32)]

Read 457 times