+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு உங்கள் வெற்றி மற்றும் நல்வாழ்வு தொடர்பாக  கர்த்தர் ஆர்வம் காட்டுகிறார்! (பகுதி 2)

1_E.png

வாழ்க்கைக்கும்  தேவ பக்திக்கும்  தேவையான அனைத்தும் அவருடைய தெய்வீக சக்தியால் ஏற்கனவே நம்மில் வைக்கப்பட்டுள்ளன.

ஏனென்றால், நம்மைப் பெயர் சொல்லி அழைத்து, அவருடைய நற்குணத்தின் மகிமையான வெளிப்பாட்டின் மூலம் அவரிடம் வரும்படி நம்மை அழைத்த அவரை அறிந்த அனுபவத்தின் மூலம் இவை அனைத்தும் நமக்குப் பெருகியது.

இதன் விளைவாக விலை மதிப்பற்ற  மேன்மையான வாக்குத்தத்தங்களை அவர் நமக்கு அளித்துள்ளார், இத்தகைய வாக்குத்தத்தங்களின் வல்லமையின் மூலம் நாம் தெய்வீக சுபாவத்தை​ அனுபவிக்க முடியும், இதன் மூலம் உலக  இச்சைகளிலிருந்து தப்பிக்கக் கூடுமானதாகும்.

ஏனெனில், தேவன் தம்முடைய மகத்தான பொக்கிஷமாகிய அவருடைய குமாரனாகிய இயேசுவை நமக்குக் கொடுத்து, அவருடைய அன்பை நிரூபித்திருக்கிறார். மேலும், தேவன் அவரை நம் அனைவருக்கும் பலியாக ஒப்புக்கொடுத்ததால், அவர் கொடுக்க வேண்டிய வேறு எதையும் நமக்குப் பெறவிடாமல் தடுப்பதில்லை.

நீங்கள் அவரை விசுவாசிப்பதும், அவரில் முழுமையாக சார்ந்திருப்பதையுமே கர்த்தர் விரும்புகிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அவர் உங்களுக்கு சகல நன்மைகளையும் வாரி வழங்கவும், உங்கள் ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றவும் காத்துக் கொண்டிருக்கிறார்!

வேதாகம வசனங்கள்: 2 கொரிந்தியர் 8:9, 9:8; உபாகமம் 8:17-18; 3 யோவான் 1:2; 2 பேதுரு 1:3-4; ரோமர் 8:32; 1 தீமோத்தேயு 6:17

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#22)]

Read 716 times