+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

மன்னிப்புக் கொடாமை ஒரு திருடன்! (பகுதி 1)

1_E.png

பேதுரு இயேசுவை அணுகி, “எனக்குத் தப்புச் செய்கிற (சீண்டுகிற) என் சகோதரனை (சக விசுவாசி) எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறையா?” எனக் கேட்கலானான்.

அதற்கு இயேசு, “பேதுருவே, ஏழு முறை அல்ல, ஏழு எழுபது முறை முறை!

மத்தேயு 18:21-22

நிச்சயமாக, நீங்கள் யாரையும் பலமுறை

 மன்னிக்க விரும்ப மாட்டீர்கள், ஆனால் அன்பில் நடக்க முடிவு செய்வதன் மூலம், நீங்கள்  தேவனுடைய அன்பில் நடக்கிறவர்களாக இருப்பீர்கள்.

அதன்பிறகு, மன்னிக்க மறுத்த ஒரு அதிகாரியின் உவமையைக் கூறி, பரலோக ராஜ்யத்தில் மன்னிப்பின் பாடங்களை இயேசு தொடர்ந்து விளக்கினார். (மத்தேயு 18:23-35ஐ வாசியுங்கள்).

இயேசு உவமையை இவ்வாறாக கூறி முடிக்கிறார்: "உங்கள் சகோதர சகோதரிகளை உங்கள் இதயப்பூர்வமாக மன்னிக்க மறுத்தால், என் பரலோகத் தகப்பனும் உங்களை மன்னியார்."

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மன்னிப்பின்மையானது உங்களை பிசாசின் கைகளில் அல்லது வதைப்பவனின் ஆளுகைகுள்  வைப்பதாக இயேசு பெருமான் கூறினார்.

பேரழிவுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று மன்னிப்பின்மையாகும்.

அது உங்களைப் பொல்லாங்கனின் கரங்களில் ஒப்படைக்கும்.

இது தீய ஆவிகளுக்கு கதவைத் திறக்கும், நீங்கள் மன்னிப்பளிக்காமலிருக்கும் வரை வதைப்பவன் கைவசத்தில் இருக்க நேரிடும்.

நாம் மன்னிக்காவிட்டால், வதைப்பவன் வசம் அனுப்பப்படுவதுடன் சாத்தானும் நம் வாழ்வில் சுதந்திரமாக அணுகுவான்.

நாம் அன்பிலிருந்து வழி விலகி சச்சரவுகளுக்குள் இறங்கும்போது, ​​நாம் பேரழிவு மற்றும் ஆபத்துக்களுக்கு வழிகளை திறக்கிறோம், ஏனெனில் அவ்வாறான சந்தர்ப்பத்தில் விசுவாசமானது  தோல்வியடையும்!

விசுவாசத்தின் நியாயப்பிரமாணம் ஒருபோதும் தோல்வியடைவதில்லை!

அது  தேவனுடை ய நியாயப்பிரமாணம் என்பதால் எப்போதும்  செயற்பட்டுக் கொண்டிருக்கும்.

ஆனால் நாம் அன்பில் நடவாமலிருக்கும் பட்சத்தில் அதனை நாம் கிரியையிலிட தவறி விடுபவர்களாக இருக்கிறோம். அன்பில் நடக்காமல் இருப்பதன் மூலம் நாம் அதைச் செய்யத் தவறிவிடலாம்.

சச்சரவுகளும். மன்னிப்பளிக்காமையும் உங்கள் வாழ்க்கையில் பேரழிவை வரவழைக்கும்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#23)]

Read 746 times