+94722340440 | 0112719730 | 2nd Floor, 28 Galle Road, Dehiwala South. Sri Lanka.

உங்கள் இதயத்தில் நீங்கள் எதைப் பதித்து வைத்திருக்கிறீர்கள்? (பகுதி 1)

1_E.png

"நல்ல மனுஷன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லவைகளை எடுத்துக்காட்டுகிறான், பொல்லாத மனுஷன் பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாதவைகளை எடுத்துக்காட்டுகிறான்." என்று இயேசு கூறினார்.

மத்தேயு 12:35 மற்றும் லூக்கா 6:45ஐ வாசியுங்கள்.

கிரேக்க மொழியில் "பொக்கிஷம்" என்ற வார்த்தையின் அர்த்தம்: "வைப்பு" என்பதாகும். எனவே, ஒரு நல்ல மனிதன் தனது இதயத்தின் நல்ல வைப்பிலிருந்து நல்ல விஷயங்களைப் பெறுகிறான்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மக்களும் இவ்விதமாகவே அறியப்படுகிறார்கள்.

ஒரு நல்ல நேர்மையான மனிதனின் இதயத்தில் நல்லொழுக்கம் சேமிக்கப்படும்போது அது நல்ல பலனைத் தரும் ஆனால் தீயவை அவனுள் மறைந்திருக்கும் போது தீய பலனைத் தரும்.

ஏனென்றால், உங்கள் இதயத்தில் சேமித்து வைத்திருக்கும் காரியங்கள் உங்கள் கனிகளால் காட்டப்படும், உங்கள் வார்த்தைகளால் கேட்கப்படும்.

தேவனுடைய வார்த்தைக்கு முரணாக காணப்படும் எதையும் தேவன்  தீயதாகவே கருதுகிறார்.

நீங்கள் எதனை அடிக்கடி பேசுகிறீர்களோ, அது உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறி விடும்.

அது உங்கள் இதயத்தில் உள்ளதை வெளிப்படுத்தும்.

சிலருக்கு இது புரியாது.

 “இந்த ‘விசுவாச” மனிதர்கள் ஏன் எப்போதும் ஜெயங்கொள்ளுதலைப் பற்றியே பேசுகிறார்கள், ஏன் அவர்கள் எப்போதும் இல்லாதவற்றை இருப்பதாகவே கூறுகிறார்கள்? என்று சிலர் கூறுவதுண்டு. ரோமர் 4:17

பதில் எளிது: அவர்கள் தேவனுடைய ஞானத்தின் கொள்கைகளைப் பின்பற்றுதினாலாகும்.

 நாம் செய்யும் சகலவற்றிலும் தேவனை நகல் எடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்று வேதாகமம் கூறுகிறது, ஏனென்றால் நாம் அவருடைய அன்பான மகன்கள் மற்றும் மகள்கள் என்ற வகையில் நாம் நம் தந்தையை பிரதிநிதித்துவப்படுத்துகிறவர்களாக இருக்கின்றோம். எபேசியர் 5:1

நாம் அவருடைய பிள்ளைகள் என்ற வகையில், நாம் அவரைப் பின்பற்ற வேண்டும் - அவரை நகலெடுத்து, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும், நாம் அவரைப் போலவே நடக்கவும், பேசவும் வேண்டும்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#12)]

Read 3305 times