+94722340440 | 0112719730 | 2nd Floor, 28 Galle Road, Dehiwala South. Sri Lanka.

உங்கள் இதயத்தில் நீங்கள் எதனை வைப்புச் செய்து வைத்துள்ளீர்கள்? (பகுதி 2)

1_E.png

நீங்கள் தேவனுடன் ஒரு உடன்பாட்டிற்கு வரவேண்டும்.

அப்போது நீங்கள் இல்லாதவற்றை இருந்ததைப் போல் அழைப்பீர்கள்!

இங்கு நாம் பிரச்சனையைக் குறித்து அலட்சியப்போக்குடன் இருக்கும்படி கூறவில்லை. மாறாக பிரச்சனையைப் பற்றிப் பேசிப் பேசி அதனைப் பெரிதுப்படுத்த வேண்டாம் என்றே நமக்குக் கூறுப்படுகிறது.

தேவனைப் பற்றிய விசுவாசமானது உங்களுக்குள்  அருளப்பட்டிருக்கிறது. ரோமர் 12:3

ஆகையால் மலையைப் பற்றிப் பேசாமல், மலையிடம் பேசுங்கள்.

"எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும்" என்று இயேசு கூறினார். மாற்கு 11:22-23

நாம் கூறுவது சம்பவிக்கும் என்று விசுவாசிக்க வேண்டும்.

இல்லை, நாங்கள் பிரச்சனையை அலட்சியப்படுத்தவில்லை;​அதைக் குறித்து நாங்கள் ஏதாவது செய்து கொண்டு தான் இருக்கிறோம்.

நாம்  தேவனுடைய வார்த்தையின் மூலதர்மங்களைப் பிரயோகித்து, தேவனுடைய ஞானத்தைப் பயன்படுத்துவோம்.

தேவ ஞானமானது மனிதனின் ஞானத்தை விட மேலானதாக இருக்கின்றது.

மனிதன் தனது பிரச்சினைகளைப் பற்றி தொடர்ந்து பேச விரும்புகிறான், அப்பொழுது அவனுடைய வார்த்தைகள் அவனுக்குள் அந்த பிரச்சினையை சித்திரம் தீட்ட ஆரம்பிக்கின்றன.

உங்கள் பிரச்சினை மற்றும் உங்கள் கடினமான சூழ்நிலையைப் பற்றி நீங்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால், அது உங்களுக்குள் முழுமையாக வளரத் தொடங்கி விடும்.

உங்கள் மனதில் பயம் இருந்தால், அது வார்த்தைகளாக வெளிப்பட்டு மேலும் பயத்தை உருவாக்கும்.

உங்கள் இதயத்தில் விசுவாசமிருந்தால், அது வார்த்தைகளாக வெளிப்பட்டு இன்னும் அதிக விசுவாசத்தை உருவாக்கும்.

தேவனுடைய வார்த்தை உங்கள் இருதயத்திற்கு தேவைப்படின், அதனை​நீங்கள் உங்கள் இருதயத்திலும் உங்கள் வாயிலும் வைத்திருக்க வேண்டும்.

தேவனுடைய வார்த்தைக்கு உங்களைத் திறந்து கொடுப்பீர்களெனின், அது உங்கள் வாழ்க்கையின் திசையை முற்றிலும் மாற்றிவிடும்!

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#13)]

Read 3325 times