+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South
சரியான அஸ்திபாரத்தின் மீது கட்டுங்கள்! (பகுதி 2)
ஒரு வீடு விழுவதற்கும் இன்னொரு வீடு உறுதியாக நிற்பதற்கும் அல்லது ஒரு மனிதன் அழியவும், வௌ்ளப் பெருக்கு அவனுக்கு மட்டும் அழிவைக் கொடுக்க காரணம் என்ன என்பதை நாம் பார்ப்போம்.
இருவரின் வாழ்விலும் ஒரே வகையான வௌ்ளப்பெருக்கு, சூறாவளி மற்றும் ஒரே வகையான அனர்த்தங்களே ஏற்பட்டன.
ஒருவன் அவைகளால் அசைக்கப்படாவிட்டாலும், மற்றவன் சட்டென வீழ்ந்தான்
பாருங்கள், வீடு அசைக்கப்படவில்லை என இயேசு கூறவில்லை. மாறாக “அசைக்கப்படக் கூடாதே போயிற்று” என்பதாகவே கூறினார்.
அதாவது அந்த வித்தியாசம் அஸ்திபாரத்திலேயே ஏற்பட்டது என்பதை நாம் காணக்கூடியதாக இருக்கிறது.
சூறாவளிக்கு முகங்கொடுத்த வீடு ஒரு உறுதியான அஸ்திபாரத்தின் மீதே கட்டப்பட்டிருந்தது.
அந்த அஸ்திபாரம் தேவனுடைய உறுதியான வார்த்தையின் மீதே இடப்பட்டிருந்தது.
அந்த அஸ்திபாரம் இயேசுவின் கூற்றின்படி கிரியை செய்து கொண்டிருந்தது.
ஆயினும் உங்கள் வீட்டுக்கு வரும் பல அனர்த்தங்கள் தேவனால் அனுமதிக்கப்பட்டவைகள் அல்ல, அவைகள் நீங்களாகவே இழுத்துப் போட்டுக் கொள்பவைகளாகும்.
நீங்கள் இடம் கொடுக்கும் காரியங்களுக்கு தேவனும் இடமளிப்பதுண்டு.
அவைகளை தடுத்துக் கொண்டிருப்பது தேவனுடைய கடமையல்ல. அது உங்களது கடமையாகும்!
இ்ன்னும் சிலர், நோய்கள் வருவது நல்லது, அவைகள் மூலம் நமக்குப் ஒரு பாடம் புகட்டப்படுகிறது. அது தேவனுடைய சித்தம் என்றெல்லாம் பிரலாபிப்பதுண்டு.
அது சாத்தானின் முதல்தர பொய்யாகும்!
அவர்கள் முகம் கொடுக்கிற பிரச்சினைகள் சிக்கல்கள் அனைத்தும் தேவசித்தமே என்பதை விசுவாசிக்கும்படியாக சாத்தான் அவர்களை வஞ்சிக்கிறான்.
இன்னும் சிலர், “இவற்றை தேவன் எனக்கு அனுமதிப்பாரேயானால் அவற்றை எதிர்க்க நான் யார்?” என்றெல்லாம் வீண் தர்க்கம் செய்வதுண்டு.
அவ்வாறான சிந்தைகள் உங்களது விசுவாசத்தை உதாசீனம் அடையச் செய்கிறது.
விசுவாசத்தின் கட்டுக்கோப்புக்குள் நீங்கள் கிரியை செய்வதற்குள்ள இயலுமையை அது தடுக்கிறது.
தேவனுடைய வார்த்தையின் மீது நமது வாழ்க்கையை கட்டியெழுப்புவது மிகவும் முக்கியம்.
வசனத்தின்படி செய்கிறவனாக இருக்கிறபடியால் சாத்தான் எவ்விதத்தில் முயன்றாலும் அந்த அஸ்திபாரத்தை அவனால் அழித்தொழிக்க முடியாது!
விசுவாசிகளின் ஐக்கியம்
_____________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#26)]