+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

வருகிற ஆண்டு தொடர்பாக நீங்கள் அறிந்து  கொள்ள வேண்டியவை

1_E.png

இந்த ஆண்டு பல சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது.

சவால் என்றவுடனேயே, "அடக் கடவுளே, இன்னுமொரு சவாலா? என்று நமக்கு நினைக்கத் தோன்றும்.  அப்படித் தோன்றக் காரணம்,  நீங்கள் வெற்றியின் மனநிலையில் அல்ல, தோல்வி மனப்பான்மையுடன் இருப்பதினாலாகும். 

  

சவால் எப்போதும் நல்லது எனத் தோன்றக் காரணம், ""உலகத்தில் உள்ளவரைப் பார்க்கிலும் உங்களில் உள்ளவர் பெரியவர்."  என்பதை நீங்கள் அறிவதனாலாகும். 1 யோவான் 4:4

நீங்கள் சவால்களைப் பற்றி பேசும்போது, வெற்றிகரமான மனதுடன் முன்னேற விருப்பமுள்ளவரைப் ஒருவரைப் பற்றியே பேசுவீர்கள்.

வாழ்க்கையில் எல்லாவற்றையிம் விட மிகப்பெரிய மூலாதாரத்துடன் நான் இணைந்திருக்கும்போது, ​​நான் சவால்களுக்கு பயப்படுவதில்லை.

மிகப்பெரிய அதிபார குத்துச்சண்டை வீரர்களுக்கு யாரேனும் விடும்  சவால்களுக்கு அவர்கள் பயப்பட மாட்டார்கள் என்றே நான் நினைக்கிறேன்..

 முதல் சுற்றிலேயே எல்லாம் போய் முடிந்துவிடப் போகிறது என்று அவன் அறிந்திருப்பதால் அவன் பயப்படப் போவதில்லை. எதிராளி எழுந்திருக்கப் போவதில்லை.

உங்களுக்குள் ஒரு வலுவான தன்மை இருப்பது அவசியம். அப்பொழுது நீங்கள் ஒரு சவாலை எதிர்கொள்ளும் போது, அந்த சவால் உங்களுக்கு பிரச்சினையாகப் போவதில்லை. எவ்விதத்திலும் அது உங்களுக்கு ஒவ்வாது.

வாழ்க்கையில் புதிய சவால்களை எதிர்கொள்ளும் நமக்கு ஆபிரகாம், நோவா, யோசேப்பு மற்றும் ராகாப் - எனும்   இந்த நான்கு கதாபாத்திரங்களும் முக்கியமானதாக இருக்கும்.

நாம் எதிர்கொள்ளவிருக்கும் பல சவால்களைப் பற்றியே நான்  பேசவிருக்கிறேன்.

அத்தோடு நான் இந்த நான்கு கதாபாத்திரங்களைப் பற்றியும், அந்த கதாபாத்திரங்கள் மூலமாக நாங்கள் எவ்வகையான காரியங்களுக்கு முகம் கொடுக்கப் போகி றோம் என்பதை ஆராய்வது பற்றியும் அவற்றை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாகவும் நமக்கு ஒரு அறிவை எடுக்கலாம். 

வருகிறதான ஆண்டு மிகவும் மகிழ்ச்சிகரமான ஆண்டு என்பதை விசுவாசியுங்கள். அத்துடன் அது சவால்கள் மிக்க ஒரு வருடமாகவும் இருக்கப் போகிறது.

மக்கள் தங்கள் சவால்களில் இருந்து பின்வாங்குவதற்கான காரணம் தங்கள்  இறைவன் யார் என்பதைப் பற்றி அறியாததாலாகும். 

வேதாகமம் கூறுகிறது, "தங்கள் தேவனை அறிந்தவர்கள் திடங்கொண்டு பெரிய சாதனைகளைச் செய்வார்கள்!" தானியல் 11:32.

(ஆதியாகமம் அதிகாரங்கள் 12 முதல் 25 வரை ஆதியாகமம் 5:29;

ஆதியாகமம் அதிகாரம் 6:11 முதல் அதிகாரம் 9:10 வரை;

ஆதியாகமம் அத்தியாயங்கள் 37 முதல் 50 வரை; யோசுவா 2:1–24; எபிரெயர் 11:31வாசியுங்கள்.)

எங்கள் யூடியூப் சேனலில் முழு செய்தியையும் பார்க்கவும்:

https://youtu.be/JhSKoJX30Zw

முழுப் பிரசங்கம்- அதிக சவால்கள் மிக்க வருடம்

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#27)]

Read 530 times