+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

எங்களுக்கு அறிவு தேவை! (பகுதி 1)

1_E.png

"என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்:" ஓசியா 4:6.

இந்த வசனத்தில் அழிவிற்கான மூலக் காரணத்தை தேவன் வௌிப்படுத்துகிறார்: அறிவின்மையால் என் ஜனங்கள் அழிக்கப்படுகிறார்கள்.

ஒரு நபர் தனக்குள்ள அறிவை விட  வேறு எதையும் அதிகமாக நம்ப முடியாது.

அவன் மிகவும் வைராக்கியமுடையவனாக இருக்கலாம்; ஆனால் அவனுக்கு அறிவு இல்லாமல் இருப்பின், அவனது வைராக்கியம் தவறாக வழிநடத்தப்படும்.

பல கிறிஸ்தவர்களுக்கு அதிக ஆபத்துக்கள் வருவதற்கான முதன்மையான காரணம் அறிவின்மையாகும். 

இந்த அறிவின்மை மக்களை தேவையற்ற பிரச்சனைகள், துன்பங்கள்,  வேதனைகள், நோய்கள் மற்றும் அழிவுகளில் விழ வைக்கிறது.

 

2 பேதுரு 1:2-3 கூறுகிறது, “தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது. தம்முடைய மகிமையினாலும் காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினார்”

கிருபை என்பது, நீங்கள் அதனைப் பெற தகுதியற்றவராக இருந்தாலும், உங்கள் சார்பாக அவருடைய வல்லமையையும் திறனையும் பயன்படுத்தவுள்ள தேவனுடைய சித்தமாகும்.

இந்த வசனத்தின்படி, ஒரு நபர் தேவனைப் பற்றிய அறிவைப் பெறும்போது தேவனின் சித்தமானது அவனுக்குப் பெருகுகிறதாக இருக்கிறது.

“... திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது”2 பேதுரு 1:4. 

இதன்மூலம் நீங்கள் தெய்வீக சுபாவத்தில் பங்குள்ளவர்களாகும்படி, தேவையான சகலமும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த திவ்விய சுபாவத்திற்கான காரியங்களுக்கு நாம் உள்ளாக வேண்டுமெனின். அதைக் குறித்ததான அறிவைப் பெறுதல் அவசியம்.

தெய்வீக வாக்குத்தத்தங்களால் தான் நாம் தேவனுடைய தெய்வீக சுபாவத்தில் பங்குபெறுகிறோம்.

மீண்டும், வசனம் 3 கூறுகிறது, ஜீவனுக்கும் தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும். அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினார்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#28)]

Read 555 times