+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

எவ்விதமான சூழ்நிலையிலும் நீங்கள் அமைதியாக இருப்பது எப்படி? (பகுதி 1)

1_E.png

நாம் அடுத்ததாக நோவாவின் கதாபாத்திரத்தைப் பார்க்கப் போகிறோம் - ஆதியாகமம் 6.

ஆதாமும் ஏவாளும் தேவனுக்கு எதிராக பெரும் துரோகத்தை இழைத்த பின்பு, நிலைமை வர வர மோசமாகிக் கொண்டு சென்றதுடன் மக்களின் செய்கைகளும் தீமையாக இருப்பதை தேவன் காண்கிறார் என்பதை நாம்  கண்டோம்.

இப்போது இயேசு சொன்ன ஒரு விஷயத்தை உங்களுக்கு நினைவூட்டுகிறேன், அவர் வரப்போகும் நாட்கள் நோவாவின் காலத்தைப் போலிருக்கும் என்பதாக அவர் கூறினார். இப்போது நாம் அந்தக் கால கட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

மக்களின் இதயங்களின்  எண்ணங்கள் தொடர்ந்தும் தீயதாகிக் கொண்டிருப்பதைக் காணலாம். 

அவர்களுக்கு  செய்யவேண்டியதெல்லாம் திருடுவதும் கொல்லுவதும் அழிப்பதும் தான். இனி அவர்களின் மனமானது அவர்கள் காண்பவற்றைக் கொண்டு நிரல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.

மக்கள் மனதில் உள்ள அக்கிரமம் அதிகமாக இருப்பதைக் தேவன் கண்டார். படைப்பின் முடிவு  நெருங்கி விட்டதாக கூறினார்.

ஆனால் திடீரென்று எட்டாவது வசனத்தில் ஏதோ மாற்றம் ஏற்படுகிறது.

நோவா கர்த்தருடைய கண்களில் தயவைப் பெற்றான். நோவா என்ற வார்த்தையின் அர்த்தம், ஓய்வின் மனிதன் என்பதாகும்.

உங்களைச் சுற்றி நடக்கும் அனைத்தும் நீங்கள் ஓய்வு காலத்தில் இருக்கும்போதே நடக்கிறது என்று கூறுகிறேன். தேவனுடைய குணாதிசயத்திற்கேற்ப அவருடைய பார்வையில் நீங்கள் கிருபை அல்லது தயவைக் காண்பீர்கள்.

இதுவே நோவாவின் குணம்: அவர் தனது தலைமுறையில் நீதியுள்ள மனிதராக இருந்தார். நீயாயமிக்கவராக இருந்தார். நீங்கள் நோவாவைப் பார்த்து, அவர் இளைப்பாறுதல் கொண்ட ஒரு நீதியுள்ள மனிதர் நீங்கள் சொல்லலாம்.

நீங்கள் நியாயமான காரியங்களைச் செய்யும் போது கடவுளின் தயவைப் பெறுவீர்கள். 

நோவா அவரது தலைமுறையில் நேர்த்தியானவராக இருந்தார். அவர் தனது குடும்பத்தை ஒழுங்கமைத்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர், அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். 

அவர் எப்போதும் அவர்களின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்தார்.

BELIEVERS’ FELLOWSHIP

_______________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#33)]

Read 485 times