+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 16)

1_E.png

இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய அதே ஆவியானவர் தான் இப்போது உங்களில் வாசம்பண்ணிக் கொண்டிருக்கிறார்.

உங்களிடம் விசுவாசத்தின் ஆவி உள்ளது.

இது பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷமாகும். அதற்காகவே நாம் விசுவாசிக்கப் போகிறோம்: ஏனென்றால் சபையானது பல ஆண்டுகளாக கடைபிடித்துக் கொண்டு வரும் சில விஷயங்களுக்காக மனந்திரும்புவதைக் தேவன் காணப் போகிறார்.

சபை மனந்திரும்புகையில், உலகெங்கும் பாரிய மனந்திரும்புதல் ஏற்படும்.

இது உலகத்தை நல்லவிதமாக பாதிப்பதோடு, பலர் கிறிஸ்துவிடம் வரப் போகிறார்கள்.

அதிகளவில் ஜனங்கள் மனந்திரும்பப் போகிறார்கள். காரணம் திருச்சபையில் அதிகளவிலான மறுசீரமைப்புக்கள் ஏற்படப் போகிறது. இந்த நான்கு சுவர்களிலான இப்பிரபஞ்ச சபையில் மட்டுமல்ல, கிறிஸ்துவின் சரீரத்திலும் சகல சபைகளுக்குள்ளும்பு ஏற்படப் போகிறது. 

சபையில் பாரிய அளவிலான மனந்திரும்புதலைப் பார்க்கப் போகிறோம். மேலும் மக்கள் கர்த்தரிடம் திரும்பி வந்து, "ஆண்டவரே, எங்கள் கைகளால் அதிகளிலான காரியங்களில் தவறுவிட்டோம், நாங்கள் சும்மா சபைக்கு வந்து போய்க் கொண்டிருந்தோம்" என்று கூறுவார்கள்.

“ஆனால் இப்போது, நாம் நமது சிந்திக்கிற விதத்தை மாற்றப் போகிறோம்; நாங்கள் மனந் திரும்பப் போகிறோம்; பெரிய காரியங்கள் நடக்கும் என்பதை நாங்கள் விசுவாசிக்கப் போகிறோம்.

 

சபையானது மீண்டும் நிலைநாட்டப்படும்போது போது, உலகிலும் பாரிய அளவிலான மனந்திரும்புதலை நாம் பார்க்கப் போகிறோம்.

 

கர்த்தர் எம்மை இரட்சித்தது போல், நீங்கள் கனவிலும் நினைக்காத மக்கள் இரட்சிக்கப்படுவார்கள்.

புறஜாதிகளைக் காப்பாற்றுவதன் மூலம் தேவன் இஸ்ரவேலைருக்கு  பொறாமையை ஏற்படுத்துவார் என்று வேதம் கூறுகிறது; அவ்வண்ணமாக, அவர் திருச்சபையிலும் செய்யப் போகிறார்.

அந்நிய ஜாதிகளின் இரட்சிப்பைப் பார்த்து நம்மைப் பொறாமைப்படச் செய்யப் போகிறார். ஒருபோதும் இரட்சிக்கப்படுவார்கள் என நினைக்காத மக்களும், கடின இருதயமுள்ள மக்களும், ஒருபோதும் மனந்திரும்பாத ஜனங்களும்; மனந்திரும்புதலுக்கு வரப் போகிறார்கள்.

நாம் கனவில் கூட நினைக்காத பெரிய காரியங்களை அவர்கள் செய்யப் போகிறார்கள்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#865)]

Read 487 times