+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

சரியான அஸ்திபாரத்தின் மீது அமையுங்கள் (பகுதி 1)

1_E.png

லூக்கா 6:46-49 மற்றும் மத்தேயு 7:24-27 இல் இயேசு  நேரத்தியாக ஒரு அடித்தளத்தை இடுவதைப் பற்றி பேசுகிறார்.

அவர் இரண்டு மனிதர்களை விவரிக்கிறார்: ஒருவர் வாழ்க்கையை வெற்றிகரமாகவும், மற்றவர்  தோல்வியடைந்தவராகவும் இருந்தார்கள்.

இயேசு சொன்னார், “நான் உங்களுக்குக் கற்பிப்பதை நீங்கள் நடைமுறைப்படுத்தாவிட்டால், ‘என்னை உங்கள் ஆண்டவரும் எஜமானுமானவர்’ என்று சொல்வதால் உங்களுக்கு என்ன நன்மை?”

என்னை உண்மையாகப் பின்பற்றுபவர் மற்றும் நான் சொல்வதைக் கேட்டு நடப்பவர் யார் என்பதை விவரித்துக் காட்டுகிறேன்.

அவர் ஒரு வீட்டைக் கட்ட சரியான இடத்தைத் தேர்ந்தெடுத்து ஆழமான மற்றும் பாதுகாப்பான அத்திவாரத்தை                                                                 அமைக்கும் ஒரு மனிதனைப் போன்றவர்.

புயல்களும் வெள்ளமும் அந்த வீட்டிற்கு எதிராக வந்தபோதும், ​​​​அது தொடர்ந்து வலுவாகவும், புயலால் அசைக்கப்படாமலும்  நின்றது, ஏனென்றால் அவர் அதை சரியான அடித்தளத்தின் மீது புத்திசாலித்தனமாக கட்டினதிலாகும்.

ஆனால் என் போதனையைக் கேட்டும் அதைக் கடைப்பிடிக்காதவன் நிலையான அங்திபாரத்தை இடாது வீட்டைக் கட்டுகிறவனுக்குச் சமானமாவான்.

புயல், வெள்ளம் சீற்றம், காற்று அந்த வீட்டிற்கு எதிராக வீசும்போது, ​​அது உடனடியாக இடிந்து மொத்தமாக நஷ்டப்பட்டு போய்விடும்.

இந்த இரண்டு கட்டுமானர்களில் நீங்கள் எவ்வகையான கட்டுமானனாக இருப்பீர்கள்?

இந்த இரண்டு சூழ்நிலைகளிலும், இருவரும் வார்த்தையைக் கேட்டனர், ஆனால் ஒரே ஒரு மனிதன் மட்டுமே புயலுக்கு  எதிராக நின்றான்.

ஒருவர் மட்டுமே இரட்சிக்கப்பட்டார் என்று சிலர் நினைக்கிறார்கள் ஆனால் அது இயேசு கூறியது அப்படியல்ல.

இரண்டு பேரும் வார்த்தையைக் கேட்டனர் ஆனால் ஒருவர் மட்டுமே இயேசு கூறியதைச் செய்தவர்.

 வெறுமனே வார்த்தையை மட்டுமே கேட்கும் நபர் "அல்லேலூயா, கர்த்தருக்குச் ஸ்தோத்திரம்!

இன்று வார்த்தை நன்றாக இருந்தது; அற்புதமாக இருந்தது; நான் இன்று நன்றாக உணர்ந்தேன்! என்று கூறுவார் அவ்வளவுதான்.

பின்னர் அவர் தன் வழியாகச் சென்று அழிவு தனது வீட்டை அழித்துவிட அனுமதிக்கிறார்.

பேரிடர் வரும்போது, ​​நிர்க்கதியாய் நின்று பார்த்துக்கொண்டுதான் இருக்க முடியும்.

புயலை எதிர்த்து நிற்கும் சக்தி அவருக்கு இல்லை.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#25)]

Read 761 times