+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

நீங்கள் பயத்தில் வாழ வேண்டியதில்லை! (பகுதி 1)

1_E.png

வேதாகமத்திலுள்ள 2 திமோத்தேயு 1; 7 இல் கூறுகிறதாவது, “தேவன்  நமக்கு பயமுள்ள  ஆவியைக் கொடாமல்; அன்பும் பெலனும் தெளிந்த புத்தியையும் தருகிறார்."

இந்த வசனத்திலிருந்து  தேவன் பயத்தின் முதலானவர் அல்ல, அவரில் எவ்வளவேனும் பயம் இல்லை என்பதை நாம் காண்கிறோம்.

 தேவனிடம் இல்லாத எதுவும் நமக்குக் கொடுக்கப்படுவதில்லை.

இந்த பயம் ஆரோக்கியமற்ற பிசாசிடமிருந்து வருகிறது.

உங்கள் வாழ்க்கையை இந்தப் பயமாகிய அசுரன் கையாளுவானெனின் அதன் மூலமாக துன்பம், தோல்வி, அடிமைத்தனம் மற்றும் அழிவையே உருவாக்குவான்.

பயமானது ஒரு நபரின் வாழ்க்கையைப் பல்வேறு வகையில் பாதிப்பதோடு அதன் மூலமாக நரம்புத் தளர்ச்சிகள், நித்திரையின்மை, மனத்தாக்கம் போன்றவை ஏற்படுவதுடன் அது தற்கொலைக்கான தூண்டுதலுக்கும் வழிவகுக்கிறது.

"பயம்" என்பது மெய்யாகவே தீயது பற்றிய எதிர்பார்ப்பு என வரையறுக்கப்படுகிறது.

தோல்வி, நோய், ஆபத்து மற்றும் கவலையை எதிர்பார்ப்பது மட்டுமின்றி அவற்றைப் பெரிதுபடுத்திக் காட்டும் இந்த பயத்தின் தீய ஆவியானது எப்போதும் நம் வசம் நம்மிடம் இருக்க வேண்டும் என்று சாத்தான் விரும்புகிறான்.

 "பயம்” என்பது பிசாசின் இரண்டாவது பெயராகும்.

தேவனின் நல்ல காரியங்களைத் தடுக்க சாத்தான் ஒவ்வொரு நுட்பமான சாதனத்தையும் பயன்படுத்துவான்.

மக்கள் தங்களை முழுமையாக  தேவனுக்கு ஒப்புக்கொடுக்காமல், இயேசு கிறிஸ்துவில் வளமான, அபரிமிதமான வாழ்க்கையை அனுபவிப்பதைத் தடுக்கும் மிகப்பெரிய ஆன்மீகத் தடை பயமாகும்.

பயத்திற்கு எதிராக நிற்கும்படி வேதம் சொல்கிறது, “பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.

“உங்களுக்கு எதிராக இருப்பவர்களைக் குறித்து அஞ்ச வேண்டாம்” எதிலும் பயப்படாதே” என்று  தேவன் நமக்குக் கட்டளையிடுகிறார்.

இயேசுவின் நாமத்தினால் பயத்தை வெல்லலாம்!

நீங்கள் இந்த ஆவியால் கட்டுப்படுத்தப்பட்டிருப்பீர்களெனினில், அந்த பயத்தின் ஆவிக்கு விரோதமாக பேசவும் எதிர்க்கவும் தொடங்க வேண்டும்.

நீங்கள் பயத்தில் வாழ்வது  தேவனுடைய சித்தம் அல்ல.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#19)]

Read 605 times