+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

சங்கீதம் 23:1 கூறுகிறது, "கர்த்தர் என் மேய்ப்பனாயிருக்கிறார் நான் தாழ்ச்சியடையேன்." கர்த்தர் உங்கள் மேய்ப்பராகவும் உங்கள் சிறந்த நண்பராகவும் இருக்கும்போது, உங்களுக்கு எப்போதும் போதுமானதை விட அதிகமாக இருக்கும். அவர் உங்களைப் போஷிப்பார், உங்களை வழி நடத்தி, உங்களைப் பாதுகாப்பார், ஏனென்றால்…
தேவன் தாமே தம்முடைய மகத்தான பொக்கிஷமாகிய அவருடைய குமாரனைப் பரிசாகக் கொடுத்ததன் மூலமாக அவருடைய அன்பை நிரூபித்திருக்கிறார் தேவன் நம் அனைவருக்கும் பலியாக அவரைத் தாராளமாகச் செலுத்தியதால், அவர் நமக்கு வழங்க வேண்டியதை வழங்காமலிருக்க மாட்டார். ரோமர் 8:32
கர்த்தர் உங்களை நித்திய அன்பினால் நேசிக்கிறார் என்பதை அவருடைய வார்த்தை கூறுகிறது. மேலும் அவர் தம்முடைய மாறாத அன்பான இரக்கத்தால் உங்களைத் தம்மிடம் ஈர்த்துக்கொண்டார். எரேமியா 31:3 அவர் உங்களை அளவுக்கதிகமாய் நேசிப்பதை முன்னிட்டு, கிறிஸ்துவின் விலைமதிப்பற்ற இரத்தத்தால், பழுதற்ற, கறையற்ற…
லூக்கா 6:46-49 மற்றும் மத்தேயு 7:24-27 இல் இயேசு  நேரத்தியாக ஒரு அடித்தளத்தை இடுவதைப் பற்றி பேசுகிறார். அவர் இரண்டு மனிதர்களை விவரிக்கிறார்: ஒருவர் வாழ்க்கையை வெற்றிகரமாகவும், மற்றவர்  தோல்வியடைந்தவராகவும் இருந்தார்கள்.
ஒரு வீடு விழுவதற்கும் இன்னொரு வீடு உறுதியாக நிற்பதற்கும் அல்லது ஒரு மனிதன் அழியவும், வௌ்ளப் பெருக்கு அவனுக்கு மட்டும் அழிவைக் கொடுக்க காரணம் என்ன என்பதை நாம் பார்ப்போம். இருவரின் வாழ்விலும் ஒரே வகையான வௌ்ளப்பெருக்கு, சூறாவளி மற்றும் ஒரே…
இந்த முழு பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்த  தேவன் உங்களிடம் இவ்வாறு கூறுகிறார்: ‘ஜெபத்தின் மூலம் என்னை  நோக்கிக் கூப்பிடுங்கள், நான் உங்களுக்கு பதிலளிப்பேன். நீங்கள் இன்னும் அறியாத பெரிய மற்றும் வலிமையான விஷயங்களை நான் உங்களுக்குக் காட்டுவேன். எரேமியா 33:3 உங்கள் மனதில்…
மத்தேயு 15:11 ல், "ஒரு மனிதனின் இதயம் அவனது வார்த்தைகளால் தீட்டுப்படுத்தப்படுகிறதாக" இயேசு நாதர் மொழிந்தருனார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், உங்களைத் தீட்டுப்படுத்துவது நீங்கள் உண்ணும் உணவு அல்ல,நீங்கள் கூறும் வார்த்தைகளாகும்.
வார்த்தை இவ்வாறு கூறுகிறது, "தீமையால்  தோற்கடிக்கப்படாமல், தீமையை நன்மையால் வெல்லுங்கள்." நல்ல சிந்தனையைக் கொண்டும், நல்ல குணாதிசயங்களைக் கொண்டும் உங்கள் மனதையும் இதயத்தையும் நிரப்புங்கள்.
இயேசு சகல விசுவாசிகளுடனும் இரத்தத்தினாலாகிய உடன்படிக்கையைச் செய்தார்.  நாம் இந்த உடன்படிக்கையின் மக்களாக இருப்பதால், அவர் நம்மைப் பாதுகாப்பதாக வாக்களித்துள்ளார்.  எனவே, "ஆண்டவரே, இந்த உடன்படிக்கையில் உள்ள ஒவ்வொரு வாக்குறுதியும் நமக்குச் சொந்தமானது" எனக் கூறுவோம்.
சங்கீதம் 100:4 கூறுகிறது, "அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்." வாசல் என்ற எபிரேய வார்த்தைக்கு நுழைவாயில் என்று பொருள்படும்.  தேவனுடைய சந்நிதியை சேருவதற்கான நுழைவாயில் இயேசுவானவராகும். 
உக்கிராணத்துவத்தில் நிதியை விட அதிகமான விடயங்கள் உள்ளடங்குகின்றன. அதற்கு பணம் தொடர்பான நிர்வாகமும் உள்ளடக்கப்படுகிறது. பணமானது சில வழிகளில், நமது வாழ்க்கை, நமது நேரம், திறமைகள் உட்பட சம்பளத் தரவுகளை பிரதிபலிக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்
தேவனுடைய வார்த்தையைக் கற்கும்போது, ​​நம்முடைய பணப் பிரச்சினைகளுக்காக சிற்சில காரணங்கள் இருப்பதை நாம் காணலாம். நாம் தேவனுடைய தராதரங்களுக்கு எதிராக நம்முடைய பணத்தை நிர்வகிக்கிறவர்களாக இருக்கலாம். அப்படியானால், நாம் அதைக் குறித்து மனந்திரும்ப வேண்டும்.
வாழ்க்கைக்கும்  தேவ பக்திக்கும்  தேவையான அனைத்தும் அவருடைய தெய்வீக சக்தியால் ஏற்கனவே நம்மில் வைக்கப்பட்டுள்ளன. ஏனென்றால், நம்மைப் பெயர் சொல்லி அழைத்து, அவருடைய நற்குணத்தின் மகிமையான வெளிப்பாட்டின் மூலம் அவரிடம் வரும்படி நம்மை அழைத்த அவரை அறிந்த அனுபவத்தின் மூலம் இவை…
மனுஷன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன் ஜீவனை நஷ்டப்படுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? மாற்கு 8:36 ஒருவரும் கெட்டழிந்து போவது தேவனுடைய சித்தம் அல்ல, அனைவரும் மனந்திரும்ப வேண்டும் என்பதே அவருடைய சித்தமாக இருக்கிறது. 2 பேதுரு 3:9
நாம் செழிப்பாகவும் வெற்றிகரமாகவும் வாழ்வது  என்பது மெய்யாகவே அது கர்த்தரால் கொடுக்கப்படும் ஒரு கொடையாக இருக்கிறது. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு,  யோசேப்பு, தாவீது மற்றும் பலருக்கு அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் செழிப்புடனும், செழுமையுடனும் வாழ கர்த்தர் எவ்வாறு ஆசீர்வதித்து கிருபை…
வேதாகமத்திலுள்ள 2 திமோத்தேயு 1; 7 இல் கூறுகிறதாவது, “தேவன்  நமக்கு பயமுள்ள  ஆவியைக் கொடாமல்; அன்பும் பெலனும் தெளிந்த புத்தியையும் தருகிறார்." இந்த வசனத்திலிருந்து  தேவன் பயத்தின் முதலானவர் அல்ல, அவரில் எவ்வளவேனும் பயம் இல்லை என்பதை நாம் காண்கிறோம்.
பிசாசு சகல சந்தர்ப்பத்திலும் பயத்தின் மூலக்காரனாவான். நீங்கள் பயப்படும்போதெல்லாம், பிசாசுக்கு இடம் கொடுக்கிறீர்கள்.  “பிசாசுக்கு இடம் கொடுக்காதீர்கள்.” என வேதாகமம் கட்டளையிடுகிறது, மனுஷனுக்குப் பயப்பட வேண்டாம்.
அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப்பார்த்து: "இரையாதே, அமைதலாயிரு" என்றார். அப்பொழுது காற்று நின்றுபோய், மிகுந்த அமைதலுண்டாயிற்று. மாற்கு 4:39 நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் எவ்விதமான அனுபவங்களைக் கடந்துச் சென்றாலும் கர்த்தர் உங்களோடு கூட இருக்கிறார்.
பேதுரு இயேசுவை அணுகி, “எனக்குத் தப்புச் செய்கிற (சீண்டுகிற) என் சகோதரனை (சக விசுவாசி) எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழு முறையா?” எனக் கேட்கலானான். அதற்கு இயேசு, “பேதுருவே, ஏழு முறை அல்ல, ஏழு எழுபது முறை முறை! மத்தேயு…
அநேக கிறிஸ்தவர்கள் அகால மரணமடைவதற்கு பெரும்பாலும்  தேவனுடைய  வார்த்தைக்குக் கீழ்ப்படியாததே காரணமாகும். மன்னிப்பின்மை  மெய்யாகவே ஜீவனத்தைத் திருடும் ஒரு திருடனாவான். தேவனுடைய வார்த்தையின் கொள்கைகளில் செயல்படுவதன் மூலம் நம் வாழ்நாளை நீடிக்கச்  செய்யக் கூடுமாகும்.
தேவனின் பிள்ளைகள் என்ற வகையில் நீங்கள் வெற்றியுடன் வாழவே அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். தேவனிடமிருந்து பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் ஜெயங் கொள்ளுகிறவர்களாக இருப்பதுடன் அவர்கள் உலகத்தை ஜெயிப்பவர்கள்  என்று தேவனுடைய வார்த்தை கூறுகிறது; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம். 1 யோவான் 5:4
இந்த ஆண்டு பல சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது. சவால் என்றவுடனேயே, "அடக் கடவுளே, இன்னுமொரு சவாலா? என்று நமக்கு நினைக்கத் தோன்றும்.  அப்படித் தோன்றக் காரணம்,  நீங்கள் வெற்றியின் மனநிலையில் அல்ல, தோல்வி மனப்பான்மையுடன் இருப்பதினாலாகும்.  சவால் எப்போதும்…
விபச்சாரியாக இருந்த ராகாப் புதிய ஏற்பாட்டில் விசுவாசத்தின் வீராங்கனையாக குறிப்பிடப்பட்டுள்ளாள். அவளுடைய பெயர் ஆபிரகாமுடன் சேர்ந்து வருகிறது. ஏனென்றால் அவளுக்கு விசுவாசம் ஏதோ வார்த்தையில் மட்டும் அல்ல,அந்த விசுவாசத்தை அவளுடைய செய்கையின் மூலமும்  நிரூபித்தாள்.
நாம்  அதைக் கேட்டவுடனே......கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் கேட்கும்போது உங்களுக்கு விசுவாசம்  வருகிறது என்பதை அறிவீர்களா? உங்கள் இதயங்கள் கரைந்து போகும் போது, நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் அல்லது கடினப்படுவீர்கள். நீங்கள் விசுவாசியாகவோ, பின்வாங்கிப் போனவராகவோ அல்லது நீங்கள் ஒருபோதும் தேவனை விசுவாசியாதவராகவோ இருந்தாலும்…
உங்கள் சொந்த மனித வலிமையின் மீது விசுவாசத்தை வைக்காதீர்கள். வானத்திற்கும் பூமிக்கும் தேவனாகிய கர்த்தர் மீது உங்கள்  விசுவாசத்தை வையுங்கள்.                                                                                  ராகாப் ஒரு அபாயகரமான தீர்மானத்தை எடுத்தாள். எல்லோரும் இஸ்ரவேலின் தேவனை நிராகரித்தபோது, தான் தேவனை விசுவாசிப்பதாக முடிவு செய் செய்தாள்.
ஏசாயா 51:2 ல் கர்த்தர் கூறுகிறார், " உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்.."
ஆபிரகாம்  தேவனிடமிருந்துஅந்த வாக்குறுதியைப் பெற்றார். “நான் உன்னைப் பல தேசங்களுக்குத் தகப்பனாக ஆக்கினேன்” என்று வேதம் கூறுவதே அதன் அர்த்தம்.     அவர் நம்முடைய முன்மாதிரியும்  விசுவாசத்தின் தந்தையுமாக இருக்கிறார். ஏனென்றால் தேவனுடைய பிரசன்னத்தில் தேவனால் இறந்தவர்களை உயிர்ப்பிக்க முடியும் என்றும்…
Page 2 of 2